மூன்று ஜோடி சகோதரர்கள் சேர்ந்து ஆடிய ஒரே டெஸ்ட்..! கிரிக்கெட் வரலாற்றில் அபூர்வ சாதனை..!

Three pairs of brothers in a Test match
Three pairs of brothers in a Test matchimage source:indiatoday
Published on

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு, மூன்று மற்றும் நான்கு சகோதரர்கள் பல்வேறு டெஸ்டுகளில் விளையாடி இருந்தாலும் ஒரே அணியில் மூன்று ஜோடி சகோதரர்கள் (மொத்தம் 6 பேர்) இணைந்து விளையாடியது ஒரே ஒரு முறைதான்.அந்த டெஸ்ட் பற்றி காண்போம்.

1997-ஆம் ஆண்டு ஹராரே மைதானத்தில் நியூஸியலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கான முதல் டெஸ்ட் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் ஜிம்பாப்வே அணிக்காக மூன்று ஜோடி சகோதரர்கள் களமிறங்கினர். டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் இத்தகைய நிகழ்வு இந்தப் போட்டியில் மட்டுமே நடந்துள்ளது.

அந்த ஜோடி சகோதரர்கள்

  • கிராண்ட் பிளவர் (Grant Flower) & ஆண்டி பிளவர் (Andy Flower)

  • காவின் ரென்னி (Gavin Rennie) & ஜான் ரென்னி (John Rennie)

  • பால் ஸ்ட்ராங் (Paul Strang) & பிரையன் ஸ்ட்ராங் (Bryan Strang)

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இவர்களைத் தவிர மற்றொரு உறவினர் (Cousin) ஜோடியும் இந்தப் போட்டியில் இடம்பெற்றது.

ஜிம்பாப்வே அணியின் லெவனில் ஒருவராக கெய் வைட்டால் (Guy Whittall) விளையாடினார்; அவரது உறவினர் ஆண்டி வைட்டால் (Andy Whittall) இந்தப் போட்டியின் 12-வது வீரராக விளையாடியவர்.

இந்தப் போட்டியில் ஜிம்பாப்வே வீரர் கிராண்ட் பிளவர் பேட்டிங்கில் அபாரமாகச் செயல்பட்டார். ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் விளாசிய முதல் ஜிம்பாப்வே வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

முதல் இன்னிங்ஸ்: 104 ரன்கள் (288 பந்துகள், 10 பவுண்டரிகள்)

இரண்டாவது இன்னிங்ஸ்: 151 ரன்கள் (240 பந்துகள், 12 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்)

மற்ற சகோதரர்களின் பங்களிப்பு:

  • ஆண்டி பிளவர்: விக்கெட் கீப்பரான இவர் 8 மற்றும் 20 ரன்கள் எடுத்தார். விக்கெட் கீப்பிங்கில் 4 கேட்சுகளைப் பிடித்தார்.

  • காவின் ரென்னி: துவக்க வீரரான இவர் 23 மற்றும் 57 ரன்கள் எடுத்ததோடு 2 கேட்சுகளையும் பிடித்தார்.

  • ஜான் ரென்னி: வேகப்பந்து வீச்சாளரான இவர் 22 மற்றும் 16 ரன்கள் எடுத்தார்; ஒரு கேட்சையும் பிடித்தார்.

  • பால் ஸ்ட்ராங்: 42 மற்றும் 17 ரன்கள் எடுத்ததோடு, பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

  • பிரையன் ஸ்ட்ராங்: 1 மற்றும் 4* ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

முதல் இனிங்க்சில் 298 ரன்கள் எடுத்த ஜிம்பாப்வே அணி, நியூஸியலாந்து அணியை 207 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆக்கியது.கேப்டன் ஸ்டீபன் பிளெமிங் 52 ரன்கள் எடுத்தார். இரண்டாவது இன்னிங்சில் ஜிம்பாப்வே அணி 311/9 ரன்களுக்கு டிக்ளர் செய்தது.

403 ரன்கள் ஸ்கோர் செய்தால் வெற்றி அடைய முடியும் என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய நியூஸியலாந்து அணியின் பேட்டிங் சோபிக்கவில்லை. 122 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து நின்றனர்.

ஜிம்பாப்வே அணி வீரர்கள் வெற்றி அவர்கள் பக்கம் என்ற நம்பிக்கையில் உற்சாகமாக ஆட்டத்தில் ஈடு பட்டனர்.அப்பொழுது பேட்டிங் ஆட வந்தார் ஆல் ரவுண்டர் கிறிஸ் கேர்ன்ஸ்.இவர் ஜிம்பாப்வே அணியின் முதல் இன்னிங்சில் அட்டகாசமாக பந்துக்கள் வீசி 5 விக்கெட்டுக்கள் வீழித்தியுள்ளார்.

கிறிஸ் கேர்ன்ஸ் நின்று நிதனமாக ஆட துவங்கினார். மேட்சின் போக்கை தன்வசம்படுத்திக் கொண்டு முடிவையே மாற்றினார்.

ஆடம் பரோரே (51 ரன்கள் ) கிறிஸ் ஹார்ரீஸ் ( 41 ரன்கள்) துணை கொண்டு இன்னிங்சை வலுப்படுத்தினார்.7 பவுண்டரிகள் 1 சிக்ஸர் அடித்த கிறிஸ் கேர்ன்ஸ் கடைசி வரையில் நின்று ஆடி அவர் அவுட் ஆகாமல் மேட்ச் டிரா ஆக உதவினார்.

இவரது ஸ்கோர் 71* நாட் அவுட். இவரது அணியின்இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோர் 304 / 8.​​​​தோல்வி அடைந்து இருக்க வேன்டிய ​​​​​தங்களது அணியை தோல்வி அடைந்து விடாமல் போராடி தனது பொறுமையான பேட்டிங் திறமையால் காபாற்றினார் கிறிஸ் கேர்ன்ஸ்.இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் எடுத்து அசத்திய கிராண்ட் ப்ளவர் ஆட்ட நாயகராக தேர்வு செய்யப்பட்டார்.

நியூஸியலாந்து அணி கேப்டன் ஸ்டீபன் பிளெமிங் இந்த டெஸ்ட் மேட்சில் 7 கேட்சக்கள் பிடித்து சாதனை செய்தார்.

இதையும் படியுங்கள்:
7 நாட்கள்.. 2376 ரன்கள்.. 9 சதங்கள்! – கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு போட்டி இனி நடக்கவே முடியாது..!
Three pairs of brothers in a Test match

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com