IPL இறுதி கட்டத்தை நோக்கி இன்றைய மேட்ச்..! KKR (Vs) SRH – ஜெயிக்கப் போவது யாரு?

KKR vs SRH
KKR vs SRH

ஐபிஎல் 2024 விரைவில் முடிவிற்கு வரப்போகின்றது. இந்த முறையும் கோப்பையை வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட சி எஸ் கே அணி வெளியேறிவிட்டது.

மீதம் உள்ள கே கே ஆர், எஸ் ஆர் ஹெச், ஆர் ஆர், ஆர் சி பி இவற்றில் எந்த அணி வேண்டுமானாலும் கோப்பையை வெல்லலாம் என்ற சூழ்நிலை.

ஒவ்வொரு மேட்ச்சும் முக்கியத்துவம் பெரும்.

புள்ளிப் பட்டியல் முக்கியத்துவம் இழக்கின்றது.

இது வரையில் எப்படி ஆடினார்கள் என்பதைவிட, இனி எப்படி ஆடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பே இனி மேட்ச்சுக்கள் நடைப்பெறப் போகும் அடுத்த 4 தினங்களில் காணப்படும்.

கொல்கத்தா அணியில் சிறந்த பேட்டிங் ஆடுபவர்களும், பவுலிங் போடுபவர்களும் உள்ளனர். ஹைதராபாத் அணியின் கவனம் குறிப்பாக சுனில் நரின், பில் சால்ட், ரிங்கு சிங், ரசெல் போன்ற வீரர்களை அதிக ரன்கள் அடிக்கவிடாமல் அவுட் ஆக்குவத்திலும் ரன்களைக் கட்டுப்படுத்திவதிலும் இருக்கும். அதற்கு ஏற்ப அவர்களிடம் அனுபவம் மிக்க பவுலர்கள் இருக்கிறார்கள்.

கே கே ஆர் அணியில் சிறந்த அதிரடி வீரர்கள் இருந்தாலும், அடுத்த முக்கிய கட்டத்திற்கு முன்னேற வேண்டிய துடிப்பில், பதட்டம் அடையாமல் ஆட வேண்டிய கட்டாயம் 21.05.24 அன்று ஆடப் போகும் இரண்டு அணிகளுக்கும் உண்டு. கொல்கத்தா அணி பேட்டிங்கிலும், ஹைதராபாத் அணி பவுலிங்கிலும் ஸ்ட்ராங் ஆக இருப்பதுபோல் காணப்படுகின்றன.

கொல்கத்தா அணி வீரர்கள், புவ்னேஷ் குமார், பாட் கம்மின்ஸ், நடராஜன் போன்றவர்கள் பந்து வீச்சுகளை, எப்படி எதிர்கொண்டு, சமாளித்து அதிரடி ஆட்டங்கள் ஆடி வேகமாக ரன்களைக் குவிக்கின்றனர் என்பது ஒரு வேளை மேட்சின் முடிவை உறுதி செய்யுமோ என்னவோ.

இதையும் படியுங்கள்:
SRH Vs KKR: ஐபிஎல் இறுதி போட்டிக்கு முன்னேறப்போவது யார்?
KKR vs SRH

ஹைதராபாத் அணியில் அதிரடி வீரர்களும், கொல்கத்தா அணியில் உள்ள சிறந்த பவுலர்களும் , தங்கள் பங்கை அளிப்பார்கள் என்பதும் குறிப்பிட்டத்தக்கது. எந்த அணி அழுத்தத்தை எதிர்கொண்டு தாங்கி ஆடுகின்றதோ, அதற்கு இறுதி ஆட்டம் ஆட வாய்ப்பு அதிகம். வெற்றி பெரும் அணி இறுதி ஆட்டத்திற்கு செல்லும் வாய்ப்பு உள்ளதால், இரண்டு அணிகளும் தங்களது சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

கேப்டன்களின் வழி நடத்தும் முறையும் மிக முக்கியம். இரண்டு அணி கேப்டன்களில், பாட் கம்மினிஸ் வழி நடுத்துவதில் அனுபவம் மிக்கவராக காணப்படுகிறார்.

இரண்டாவது பேட்டிங் ஆடும் அணி கண்டிப்பாக வெற்றி பெறும் என்று கூறிய காலங்கள் காணாமல் போய்விட்டன. இரண்டு அணிகளுக்கும் பேட்டிங் மற்றும் பவுலிங் சூழ்நிலைகள், கட்டாயம் அழுத்தங்களை அளிக்கப் போகின்றன. எனவே, இரு அணி வீரர்களும் கவனம் சிதறாமல் ஆடவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர்.

ஆக மொத்தம், இந்த மேட்ச் கிட்டத்தட்ட இறுதி ஆட்டத்திற்கு ஒப்பாக உள்ளதால், ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com