உலகளவில் டாப் 5 பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்கள் பட்டியலை கே.எல்.ராகுல் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
இந்திய அணியின் முக்கிய வீரராக இருக்கும் கே.எல்.ராகுல் ஒரு தனியார் சேனல் பேட்டியில் கலந்துக்கொண்டார். அப்போது தொகுப்பாளர் அவரிடம், “ நான் ஒரு ஐந்து வீரர்கள் பெயரை சொல்வேன், எப்போது யார் பெயரை கூறுவேன் என்று தெரியாது. ஆனால், நீங்கள் சிறந்தவர்களை வரிசையாக சொல்ல வேண்டும். " என்று கூறினார்.
கே.எல்.ராகுலும் அதன்படி வரிசைப்படுத்தினார். அந்தவகையில் ட்ராவிஸ் ஹெட் பெயரை முதலில் கூறினார், தொகுப்பாளர். சில வினாடிகள் யோசித்த கே.எல்.ராகுல், அவர் மிகவும் நல்ல வீரர் என்றாலும், அவரை விட நல்ல வீரர்களை நீங்கள் சொல்ல வாய்ப்பிருக்கிறது , ஆகையால் அவருக்கு 5வது இடம் என்று கூறினார்.
அடுத்ததாக தொகுப்பாளர் ரோஹித் ஷர்மா பெயரை கூறினார். அதற்கு யோசிக்காமல், கே.எல்.ராகுல் இரண்டாம் இடம் என்றார். பாபர் அசாம் கூறியதும், நன்கு யோசித்த பிறகு நான்காவது இடத்தைக் கொடுத்தார். இதேபோன்று சூரிய குமார் யாதவ் பெயரை கேட்டவுடன் கே.எல்.ராகுல் அவருக்கு மூன்றாம் இடத்தை வழங்கினார். இந்த நேரத்தில் கடைசியாக விராட் கோலி பெயரை சொன்னதும் தான் விராட் கோலி பெயரை நீங்கள் கடைசியாக தான் சொல்வீர்கள் என முன்பே எதிர்பார்த்துதான், முதல் இடத்தை காலியாக வைத்திருந்தேன் என்று கூறி விராட் கோலிக்கு அவர் முதலிடத்தைத் தந்தார்.
இது ரோகித் ஷர்மா ரசிகர்களுக்கு வருத்தமளிக்கக்கூடிய ஒன்றாக அமைந்தது.
அடுத்ததாக டாப் 5 பவுலர்கள் குறித்து கேக்கும்போது, கே.எல்.ராகுல் ஆண்டர்சனை இரண்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்கா வீரரான ஸ்டெயினை முதல் இடத்திலும், ரஷீத் கானை நான்காவது இடத்திலும், பும்ராவை மூன்றாவது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் நசிம் ஷாவை ஐந்தாவது இடத்திலும் வைத்தார். இதில் இந்திய வீரரான பும்ராவுக்கு மூன்றாவது இடத்தையே வழங்கினார். ஆனால், ரசிகர்கள் இது சரியான ஆர்டர் தான் என்று கூறுகின்றனர்.