15 வயதில் 28 சிக்ஸர்கள்! யுஏஇ அணியை சிதறடித்த வைபவ் சூர்யவன்ஷியின் உலக சாதனை..!!

பெஞ்சில் உட்கார வைத்தவர்களுக்கு மரண அடி! 15 வயதில் வரலாறு படைத்த வைபவ். தேர்வு குழு தலைவருக்கு எடுத்த பாடம்
Vaibhav Suryavanshi
vaibhav Suryavanshi Ndtv
ராஜமருதவேல்

வி.ராஜமருதவேல், பொறியியல் பட்டதாரி; வெளிநாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் பணிபுரிகிறார். கல்கி ஆன்லைனில் ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, சுற்றுச்சூழல், கலை-கலாச்சாரம், சினிமா ஆகிய பிரிவுகளில் எழுதி வருகிறார்.

Updated on: 

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் தொடர் அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இந்திய அணியின் எதிர்கால நட்சத்திர வீரரான வைபவ் சூரியவன்ஷியின் ஆட்டம் எதிரணியை மிரள செய்தது. ஒட்டுமொத்தமாக இந்திய அணி பேட்ஸ்மேன்கள் எடுத்த ரன்களை விட வைபவ் அடித்த ரன்கள் மிகவும் அதிகம். கிட்டத்தட்ட அவரது ஆட்டம் ஒன் மேன் ஷோ போல இருந்தது. வரும் பந்துகளை எல்லாம் வான வேடிக்கை விட்டு இந்திய ரசிகர்களை பெரு மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் சமீப காலமாக இந்திய டி20 அணியில் வைபவ் தேர்வு செய்யப்பட்டாலும் அவரை ஆடும் லெவன் குழுவில் சேர்ப்பது இல்லை. பெரும்பாலான மேட்ச்களில் வைபவ் பெஞ்சில் அமர வைக்கப்பட்டது இருந்தார். இதன் காரணமாக இந்திய தேர்வு குழுவின் மீது கடுமையான விமர்சனங்களை கிரிக்கெட் ரசிகர்களும் முன்னாள் ஜாம்பவான் வீரர்களும் வைத்திருந்தனர்.அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக வைபவின் இன்றைய ஆட்டம் இருந்தது.

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணி, யுஏஇ அணியுடன் மோதியது , டாஸ் வென்ற யுஏஇ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களான அரியான்ஷ் ஷர்மா (2), ஆன்ஷ் டாண்டன் (8)ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஹர்பிரித் சிங் பாட்டியா மட்டும் தனி ஆளாக போராடி 130 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற 50 ஓவர்கள் இறுதியில் யுஏஇ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்களை குவித்திருந்தது. இந்திய அணியின் அர்ஷாத் கான் எதிரணியின் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

250 ரன்களை வெற்றி இலக்காக விரட்டலை தொடங்கிய இந்திய அணிக்கு , சூறாவளி போன்ற அதிரடியான ஆட்டத்தை தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி அளித்தார். ஆரம்பத்தில் இருந்தே மின்னல் வேக அதிரடியை காட்டிய வைபவ் 28 சிக்சர்கள் அடித்து எதிரணியை அதிர்ச்சியில் உறைய வைத்தார். இதன் மூலம் ஒரே இன்னிங்சில் 28 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையையும் படைத்தார்.

vaibhav Suryavanshi
vaibhav Suryavanshi NDTV

28 பந்துகளில் அதிவேக சதமும், 40 பந்துகளில் 150 ரன்களையும் , 52 பந்துகளில் இரட்டை சதமும் அடித்து யுஏஇ அணியை துவைத்து தொங்க விட்டார். அதுவும் 15 வயதே நிரம்பிய ஒரு இளம் வீரர் 200 ரன்களை சர்வதேச போட்டியில் கடப்பது இதுவே முதல்முறை.

இந்த போட்டியில் 204 ரன்கள் எடுத்த வைபவ் , அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்துள்ளார். மற்ற வீரர்கள் இணைந்து மொத்தமாக 50 ரன்கள் அடிக்க இந்திய அணி யுஏஇ அணிக்கு எதிரான போட்டியில் மாபெரும் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முழு காரணமாக இருந்த வைபவவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் இன்றைய ஆட்டத்தில் ஏராளமான உலக சாதனைகளையும் வைபவ் படைத்துள்ளார். வைபவ் மீது இந்திய சீனியர் வீரர்கள் வைத்திருந்த நம்பிக்கையை அவர் காப்பாற்றி உள்ளார்.