வறுமையால் கருவிலேயே அழியவிருந்து உலகையே வியக்க வைத்த விளையாட்டு வீரர்!

record breaker Ronaldo
record breaker RonaldoImage Credits: British GQ
Published on

கிறிஸ்டியானோ ரொனால்டோ என்ற பெயரைக் கேட்டதுமே அனைவருக்கும் கால்பந்து விளையாட்டுதான் நினைவிற்கு வரும். போர்ச்சுகல் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரர்தான் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ஏழ்மையின் காரணமாக இவரை தனது கருவிலேயே கலைத்து விடலாம் என்று எண்ணிய இந்தத் தாய்க்கு அன்று தெரியாது, உலகமே இவரை தனது தலையிலே தூக்கி வைத்து கொண்டாடப்போகிறது என்பது. உலகின் தலைசிறந்த கால்பந்து விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1985ம் ஆண்டு போர்ச்சுகல்லில் பிறந்த கிரிஸ்டியானோ ரொனால்டோவின் குடும்பம் மூன்று வேளை சாப்பாட்டிற்கே மிகவும் கஷ்டப்படும் நிலையில் இருந்தது. ரொனால்டோவின் தாய் வீட்டு வேலைகளுக்குச் செல்கிறார். இவருடைய தந்தை கால்பந்து மைதானத்தில் ஹெல்பர் வேலைக்குச் செல்கிறார். தனது தந்தை வேலை செய்யும் கால்பந்து மைதானத்துக்கு அவருக்குத் துணையாக அடிக்கடி சென்ற ரொனால்டோவுக்கும் கால்பந்து மீது ஆர்வம் ஏற்படுகிறது.

ரொனால்டோ தனது 9 வயதில் ஒரு கிழிந்த ஷூவை போட்டுக்கொண்டு ஒரு கால்பந்து வீரராக அந்த மைதானத்திற்குள் செல்கிறார். கால்பந்து விளையாட்டில் இவருக்கு இருக்கும் திறமையையும் ஆர்வத்தையும் பார்த்து அனைவரும் வியந்துப் போகிறார்கள்.

ரொனால்டோவின் 15வது வயதில் இவருக்கு ஒரு புட்பால் கிளப்பில் விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. அந்த நேரம் பார்த்து இவருக்கு இதய சம்பந்தமான ஒரு நோய் வருகிறது. மருத்துவர் ரொனால்டோவிடம், “இனி உன் வாழ்க்கையில் கால்பந்தையே தொடக்கூடாது. அப்படியில்லை என்றால் ஒரு அறுவை சிகிச்சை செய்துக்கொண்டால் இந்த பிரச்னையை சரி செய்யலாம். ஆனால், அந்த அறுவை சிகிச்சை செய்துக்கொள்வதால் உன்னுடைய உயிர் போகக்கூட வாய்ப்பிருக்கிறது” என்று கூறுகிறார். ஆனால், ரொனால்டோ அறுவை சிகிச்சை செய்துக் கொள்ளவே சம்மதிக்கிறார்.

அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிகிறது. அதன் பிறகு ரொனால்டோ கடுமையாக பயிற்சி மேற்கொள்கிறார். கால்பந்து விளையாட்டிற்காக தன்னுடைய வாழ்க்கையையே அர்ப்பணிக்கிறார். தன்னுடைய 16வது வயதிலேயே சீனியர் டீமில் விளையாட தேர்வாகிறார். ஒரு உலகக் கோப்பை போட்டியின்போது இவருக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த இவருடைய தந்தை இறந்து விட்டதாக ஒரு தொலைபேசி தகவல் வருகிறது. தன்னுடைய மனதில் சொல்ல முடியாத ஆயிரம் துயரங்களைத் தாங்கிக்கொண்டு அந்த உலகக் கோப்பைப் போட்டியை ஜெயித்துக் கொடுத்துவிட்டுதான் தனது அப்பாவின் உடலையே பார்க்கச் செல்கிறார்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையில் குறிக்கோள் இருக்க வேண்டும் ஏன் தெரியுமா?
record breaker Ronaldo

அதன் பிறகு இவர் பெற்ற வெற்றிகள் ஏராளம். 33 Senior trophies, 2 La Liga Titles, 2 Copa Del Rey என்று அவருடைய கோப்பைகளை அடுக்கிக்கொண்டே போனார். சொன்னால் நம்ப மாட்டீர்கள், இவர் யுட்யூப் ஆரம்பித்த ஒரு மணி நேரத்திலே 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ்ஸை பெற்று உலக சாதனையை படைத்தார்.

இன்றைக்கு இந்த உலகத்தின் Highest paid sportsman யார் என்று கேட்டால், அது ரொனால்டோ என்றுதான் சொல்வார்கள். இத்தனை உயரத்திற்கு சென்றும் இன்றுவரை இவருக்கு குடிப்பழக்கம் கிடையாது. இவர் உடலில் ஒரு டாட்டூ கிடையாது. அனைவரும் விரும்பும் ஒரு நல்ல மனிதராக வாழ்ந்து வருகிறார் ரொனால்டோ என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com