நாட்டு மக்களிடம் வினேஷ் போகத் மன்னிப்புக் கேட்க வேண்டும் – யோகேஷ்வர் தத் கருத்தால் பரபரப்பு!

Vinesh and yogeshwar dutt
Vinesh and yogeshwar dutt
Published on

இந்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரிலிருந்து வினேஷ் போகத் நிக்கப்பட்ட விவகாரம் குறித்து மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் பேசியுள்ளார்.

இந்த ஆண்டு ஒலிம்பிக் தொடரை இந்திய மக்களால் மறக்கவே முடியாது. நடப்பு ஆண்டு ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த பிரிவில் பங்கேற்ற வினேஷ் போகத், மிகச்சிறப்பாக விளையாடினார். மல்யுத்தத்தின் 50 கிலோ பிரிவில் கலந்துக்கொண்ட வினேஷ் போராடி வெற்றி வாகை சூடினார். ஆனால், அடுத்த நாளே அவருடைய எடை 50 கிராம் அதிகமானதாக கூறி போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதுடன், அந்த பதக்கம் யாருக்கும் வழங்கப்பட மாட்டாது என்று ஒலிம்பிக் நிர்வாகம் கூறிவிட்டது.

இதற்கிடைய அந்த 50 கிராம் எடையை குறைக்க ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல், நீர்ச்சத்து குறைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தொடர் சம்பவங்களால் மனமுடைந்துபோன வினேஷ் போகத், தனது ஓய்வையும் அறிவித்தார்.

வினேத் போகத்திற்கு ஆதரவாக நாட்டு மக்கள் முதல் பிரபலங்கள் வரை குரல் கொடுத்தனர். நாடு திரும்பிய வினேஷ் போகத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. அந்தவகையில் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற யோகேஷ்வர் தத் இதுகுறித்து பேசியுள்ளார்.

அதாவது, “வினேஷ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய நேரம் இது. வினேஷ் தனது தவறை பொது வெளியில் ஒப்புக்கொண்டிருக்க வேண்டும். அவர் அதை சதியாகக் கூறுவது தவறு, மேலும் அதற்காக பிரதமரை குற்றம்சாட்டியிருப்பது ஒப்புக்கொள்ள முடியாதது. ஒலிம்பிக் தகுதிநீக்கத்திற்கு ஆட்சேபம் செய்ய முடியாத நிலை இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
கிரிக்கெட்டை கருவறுத்த Baseball! 
Vinesh and yogeshwar dutt

விதிமுறைகளின் அடிப்படையில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரது தகுதி நீக்கத்திற்கான காரணம் அனைவர் முன்பும் தெளிவாக உள்ளது. சத்தியமில்லாமல் எந்தவொரு விளையாட்டு நிகழ்ச்சியிலும் வெற்றி பெற முடியாது.” என்று பேசியுள்ளார்.

இது சமூகவலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வினேஷ் போகத் இதனை எப்படி கையாள்வார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com