

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தனது 38வது பிறந்தநாள் இன்று கொண்டாடுகிறார். நேற்றைய நாளில் தனது அதிரடியை வெளிப்படுத்தி, ஆக்லாந்தில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 143 ரன்களைத் விரட்டிய போது, 51 பந்துகளில் 74 ரன்கள் குவித்து போட்டியை வென்று காட்டினார். அதனால் , அவரது பிறந்த நாள் முழு வெற்றிகரமாகவே இன்று தொடங்கியுள்ளது.
இந்திய கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் செய்த சாதனைகளை உலகில் எவராலும் முறியடிக்க முடியாது, என்ற எண்ணம் இருந்தபோது அதை முறியடிக்கும் திறமை கொண்ட ஒருவராக வந்தவர் தான் விராட் கோலி. ஏற்கனவே சச்சின் செய்த பல சாதனைகளை கடந்தவர் விராட் , கேப்டனாகவும் பல்வேறு சாதனைகளை செய்து இந்தியா கிரிக்கெட் ரசிகர்களால் கிங் கோலி என்று அழைக்கப்படுகிறார்.
கோலியின் பிறந்த நாளை ஒட்டி பல கிரிக்கெட் வீரர்களும் , பாலிவுட் சேர்ந்த நட்சத்திரங்களும், தேசிய அளவில் புகழ்பெற்ற பிரபலங்களும், கிரிக்கெட் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். விராட்டின் கிரிக்கெட் வாழ்க்கை பல்வேறு ஏற்ற இறக்கங்கள், பல்வேறு சாதனைகள் திருப்புமுனைகளைக் கொண்டது. சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரையில் இது அவருக்கு 19 ஆவது ஆண்டாகும். இந்தியாவின் அண்டர் 19 அணியில் கேப்டனாக செயல்பட்டு உலக கோப்பையை வென்று சாதித்த அடையாளத்துடன் இந்திய அணிக்குள் விராட் நுழைந்தார்.
விராட் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில், விராட் 123 போட்டிகளில் விளையாடி 9230 ரன்களை 46.85 சராசரியில் குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த 4 வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 30 சதங்கள் மற்றும் 31 அரை சதங்களும் அடங்கும். சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக இருந்த போதிலும் , சில ஆண்டுகளுக்கு முன்பே விராட் அதில் ஓய்வு பெற்று விட்டார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரையில் , தற்போது விளையாடும் வீரர்களில் அதிக ரன்கள் குவித்தவராக விராட் முதலிடத்தில் இருக்கிறார். 318 போட்டிகளில் 15,183 ரன்களை 58.84 சராசரியில் அடித்துள்ளார். அதிக மொத்த ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் சச்சினுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.மேலும் 55 சதங்கள் அடித்து அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் சச்சினை முந்தி முதல் இடத்தில் உள்ளார். டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 408 ரன்கள் வித்தியாசத்தில் இவர் 4 வது இடத்தில் உள்ளார் , விரைவில் கோலி இதில் முதலிடம் பிடிக்கும் வாய்ப்புகளும் உள்ளன.125 போட்டிகளில் 4188 ரன்களை 48.69 சராசரியில் குவித்துள்ளார்.
அனைத்து சர்வதேச கிரிக்கெட்டிலும், அவர் 566 போட்டிகளில் 52.86 சராசரியில் 28,601 ரன்கள் குவித்துள்ளார். எல்லா காலத்திலும் இரண்டாவது அதிக ரன் எடுத்தவராக இருக்கிறார். இதில் மொத்தமாக 86 சதங்கள் மற்றும் 149 அரைசதங்கள் அடங்கும், மேலும் அவரது அதிகபட்ச ஸ்கோர் 254* ஆகும் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமல்ல கேப்டனாகவும் விராட் ஏராளமான சாதனைகளை செய்துள்ளார். 68 டெஸ்ட் போட்டிகளில் 40 வெற்றிகளையும், 95 ஒருநாள் போட்டிகளில் 65 வெற்றிகளையும் 50 டி 20 போட்டிகளில் 30 வெற்றியையும் அவர் பதிவு செய்துள்ளார்.