நியூசிலாந்து இந்திய அணிகள் இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் செயல்பாடு குறித்து மஞ்ச்ரேக்கர் பேசியிருக்கிறார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. இதனையடுத்து இப்போது நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கட்டாயமாக வெற்றிபெற வேண்டும் என்ற சூழலில் இருந்து வருகிறது. ஆனால், நேற்று இரண்டாவது நாள் ஆட்டத்தின்படி நியூசிலாந்து அணியே முன்னிலை வகிக்கிறது. ஒருவேளை நியூசிலாந்து அணி இந்தப் போட்டியையும் கைப்பற்றியது என்றால், இந்தத் தொடரையும் வெற்றிபெற்றுவிடும்.
இந்தநிலையில் விராட் கோலி இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஒரு ரன் எடுத்து வெளியேறினார். புல் டாஸ் வீசிய சாண்டனரின் பந்தை சரியாக கணிக்காததால் விக்கெட் இழந்தார். இதற்கு பலரும் விமர்சித்து வருகின்றனர்.
அந்தவகையில் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசுகையில், “அவர் பந்தின் லெங்க்தை எவ்வாறு சரியாக கணிக்கத் தவறினார் என்பதே எனக்கு கவலையான விஷயமாக இருக்கிறது. அவர் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடும் போது லெங்க்தை கணிப்பது பிரச்சனையாக இருப்பது போல தெரிகிறது. சரியாக லைன் அண்ட் லெங்க்தில் முழுமையாக முடிவடையாத பந்தை அவர் எப்படி விளையாடி முன்னேற விரும்புகிறார் என்பது குறித்து ஒரு மில்லியன் முறை நான் பேசி இருக்கிறேன்.
அதனால் அவர் லெங்க்திற்கு எதிராக எப்படி ரியாக்ட் செய்கிறார் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். ஆனால் சுழற் பந்துவீச்சை சிறப்பாக விளையாடுகிறார். ஆனால் இந்த முறை அவர் பந்தின் லெங்க்த்தை முற்றிலும் தவறாக கணித்தார். மேலும் அவர் ஸ்வீப் ஷாட்க்கு சென்ற போது பந்து அவரது மட்டைக்கு கீழ் கிட்டத்தட்ட பிட்ச் ஆனது. அவரது ஷாட் தேர்வை விட அவர் பந்தை எப்படி தவறவிட்டார் என்பது தான் பிரச்சனையாக இருக்கிறது.” என்று பேசியுள்ளார்.
அந்தப் பக்கம் ரோகித்தும் டக்கவுட்டாகிறார், ஆனால் விராட்டின் அவுட்டை மட்டும்தான் அனைவரும் கவனிக்கின்றனர். அது ஏன் பாஸ் அப்படி?