விராட் கோலி - மேக்ஸ்வெல்: நெருங்கிய நண்பர்கள் ஆனது எப்படி தெரியுமா?

Good Friends
Kohli - Maxwell
Published on

இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி, களத்தில் ஆக்ரோஷமாக செயல்படக் கூடியவர். இந்திய வீரர்களைக் தவிர்த்து இவருடன் நெருங்கிய நண்பராக பழகியவர் தென்னாப்பிரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸ். ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக இருவரும் பல வருடங்களாக இணைந்து விளையாடியுள்ளனர். இவருக்கு அடுத்தபடியாக கோலி நெருங்கிப் பழகும் வெளிநாட்டு வீரர் கிளென் மேக்ஸ்வெல். இவர்களின் பழக்கம் எப்படி வளர்ந்தது என்ற ருசிகரமான தகவலைப் இப்போது தெரிந்து கொள்வோம்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் கிளென் மேக்ஸ்வெல்லை பெங்களூரு அணி எடுக்க காரணமாக இருந்தவர் கோலி தான். அச்சமயத்தில் மேக்ஸ்வெல் அபாரமாக செயல்பட்டு வந்தார். அதனால் ரூ.14.25 கோடிக்கு ஏலம் போனார். பெங்களூரு அணிக்கு மேக்ஸ்வெல்லை முதல் ஆளாக வரவேற்றதும் கோலி தான். விராட் கோலியுடன் இரண்டு மாதங்கள் ஒன்றாக விளையாடும் வாய்ப்பைப் பெற்ற மேக்ஸ்வெல், அவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர நினைத்தார். ஆனால், விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் கணக்கை மேக்ஸ்வெல்லால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. இதனைப் பற்றி சிலரிடம் மேக்ஸ்வெல் கேட்டறிந்த போது, கோலி உங்களை பிளாக் செய்திருக்க வாய்ப்புள்ளது என்றனர்.

பிறகு இதுபற்றி கோலியிடமே கேட்டார் மேக்ஸ்வெல். அப்போது நான் தான் உங்களை பிளாக் செய்தேன் என்று கோலி கூறினார். 2017 ஆம் ஆண்டில் ராஞ்சியில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஃபீல்டிங் செய்யும் போது, எனக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அப்போது வலியால் துடித்துக் கொண்டே தோள்பட்டை மீது கை வைத்தேன். அதனைக் கண்டு, நீங்களும் தோள்பட்டை மீது கை வைத்து என்னை கேலி செய்தீர்கள். அதனால் தான் இன்ஸ்டாகிராமில் உங்களை பிளாக் செய்தேன் என்றார். நீங்கள் செய்தது முற்றிலும் சரி என மேக்ஸ்வெல் சொல்ல, அடுத்த சில நிமிடங்களில் மேக்ஸ்வெல்லை அன்பிளாக் செய்தார் கோலி.

இந்த சம்பவம் குறித்து சமீபத்தில் ரசிகர்களிடம் பகிர்ந்த கொண்ட மேக்ஸ்வெல், “இப்போது நானும் கோலியும் இன்ஸ்டாகிராமில் மட்டுமின்றி நிஜ வாழ்விலும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம் என்றார். ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக இருவரும் இணைந்து விளையாடியது, பயிற்சி மேற்கொண்டது மற்றும் டிரெஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொண்டது என அனைத்துமே மறக்க முடியாத தருணங்கள்” என கூறினார்.

இதையும் படியுங்கள்:
கிரிக்கெட்டில் கோலி, ரோஹித்தின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது?
Good Friends

இந்திய அணியின் கேப்டன் மற்றும் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்புகளைத் துறந்த பிறகு, ஒரு வீரராக தன்னால் முடிந்த பங்களிப்பை அணிக்கு அளித்து வருகிறார் விராட் கோலி. நடப்பாண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி இரண்டாவது குவாலிபயரில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் டி20 உலகக்கோப்பைத் தொடரில் லீக் போட்டிகளில் சரியாக விளையாடாத கோலி, இறுதிப்போட்டியில் அரைசதம் அடித்து இந்திய அணி கோப்பையை வெல்ல உதவினார். மேலும், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்தும் ஓய்வும் பெற்று விட்டார் கோலி. களத்தில் ஆக்ரோஷமாக செயல்பட்டாலும், சக வீரர்களுடன் நெருங்கிப் பழகுவதில் விராட் கோலி நல்ல மனிதர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com