விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடலாம் என்று ரவி சாஸ்திரி கணித்திருக்கிறார்.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தது. அதுவும் ஐந்து நாட்களுக்கு குறைவான நாட்களிலேயே ஆட்டத்தை முடித்தது.
இரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பானில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் தொடங்கியது. இதன் முதல் நாள் ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டதால் பாதியிலேயே ஆட்டம் நின்றது. பின் அடுத்தடுத்த நாட்கள் விறுவிறுப்பாக போட்டி நடைபெற்றது. மூன்றாவது போட்டி ட்ராவில் முடிந்தது. இதனையடுத்து நான்காவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது.
இந்திய அணியை பொறுத்தவரை அடுத்த டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியமானது.
இப்படியான நிலையில், விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா மீது பல நெகட்டிவ் கருத்துக்கள் எழ ஆரம்பித்துவிட்டன. ஏனெனில் இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் இந்தியா வென்ற ஒரே போட்டியின்போது பும்ரா கேப்டனாக செயல்பட்டார். ஆனால், அடுத்தடுத்த போட்டிகளில் ரோஹித்தே கேப்டனாக செயல்பட்டார் ஆனால், எதிலுமே இந்திய அணி வெற்றிபெறவில்லை.
அதேபோல் விராட் கோலியும் ஒருமுறை மட்டுமே சதம் அடித்தார். அடுத்தடுத்த பேட்டிங் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவில் இல்லை. இந்திய அணி கண்டிப்பாக சாம்பியன்ஸ் தொடருக்கு போக வேண்டும் என்றால், இந்த தொடரைக் கைப்பற்றுவது மிகவும் அவசியம். ஆனால், இந்திய அணி மோசமான நிலையில் இருந்து வருகிறது.
இதனால்தான் ரோஹித்தும் விராட்டும் ஓய்வுபெறலாமே என்ற வார்த்தைகளும் எழுகின்றன.
இதுகுறித்து ரவி சாஸ்திரியும் பேசியிருக்கிறார். அதாவது, “விராட் கோலி இன்னும் சில காலம் விளையாடுவார் என்று நினைக்கிறேன். அவர் அவுட்டாகும் விதத்தை மறந்து விடுங்கள். அதையும் தாண்டி இன்னும் 3 - 4 வருடங்கள் விளையாட முடியும். ஆனால் ரோகித் சர்மா கவலைக்குரியவராக இருக்கிறார். எனவே ஓய்வு குறித்து சிந்திக்க வேண்டும். ஏனெனில் டாப் ஆர்டரில் விளையாடும் அவரின் புட் ஒர்க் முன்பு போல் இல்லை. அதனால் அவர் பந்தை மிகவும் தாமதமாக எதிர்கொள்கிறார். எனவே இந்தத் தொடரின் இறுதியில் ஓய்வை அறிவிப்பது நல்லது." என்று பேசினார்.