காலையில் புத்துணர்ச்சியுடன் எழ...

காலையில் புத்துணர்ச்சியுடன் எழ...
Published on

* தூங்கும் அறையில் பரிபூரண அமைதி நிலவ வேண்டும். பெரும் ஓசைகள் தூக்கத்தைக் கலைக்காமல் போனாலும் தூக்கத்தின் ஆழ்நிலையைக் குறைத்துவிடும். காதில் பஞ்சை அடைத்துக்கொண்டு தூங்குவது நல்லது.

* தினசரி ஓரளவு உடற்பயிற்சி செய்வது ஆழ்நிலைத் தூக்கத்தின் காலத்தை அதிகமாக்கும். படுக்கப் போவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் அரை மணி நேரம் விரைவு நடைபயிலுவது சிறப்பு.

* மாலையில் காபி, டீ, கோலா போன்ற பானங்களை அருந்த வேண்டாம். அவற்றிலுள்ள கஃபீன் நச்சு தூக்கத்தைக் கெடுக்கும்.

* டுக்கப் போவதற்கு முன் ஒரு தம்ளர் மோர் அல்லது பால் பருகினால் நல்ல தூக்கம் வரும். ஓரிரு பிஸ்கட்டுகளையும் சாப்பிடலாம்.

* டுக்கையில் படுத்துக்கொண்டு இனிமையான மெல்லிசையைக் கேட்பது, தத்துவ நூல்களைப் படிப்பது போன்ற செயல்கள், மனச் சுமையைக் குறைத்துத் தூக்கத்தை வரவழைக்கும். கிளுகிளுப்பூட்டுகிற நாவல்களைத் தவிர்க்கவும்.

* குறித்த நேரத்தில் படுக்கையில் படுக்கப் பழகி விட வேண்டும்.

* காலையில் கண் விழித்ததும் படுக்கையிலிருந்து துள்ளியெழ வேண்டாம். உடம்பும், உள்ளமும் தூக்க நிலையிலிருந்து விழிப்பு நிலைக்கு வரச் சிறிது அவகாசம் தேவை. படுக்கையை விட்டு எழாமல் மெல்லச் சோம்பல் முறிக்க வேண்டும். ஆழமாகப் பெருமூச்சு விட்டவாறு கைகளையும் கால்களையும் நீட்டி முதுகை வளைக்கவும்.

* டுத்து இடது கையையும் வலது காலையும் தலைக்கு மேலே உயர்த்தவும். அவற்றை இறக்கிவிட்டு வலது கையையும் இடது காலையும் தலைக்கு மேலே தூக்கி நீட்டவும். அடுத்து இரண்டு கால்களையும் மடக்கி முழங்கால்களை மார்புக்குக் கொண்டு வந்து அவற்றை இரு கைகளாலும் இறுகக் கட்டிக்கொள்ளவும். அடுத்து வலது காலை இடது பக்கமாகவும் இடது காலை வலப் பக்கமாகவும் நீட்டவும்.

* டுத்துப் படுக்கையில் உட்கார்ந்தவாறு காலை நீட்டிக் கை விரல்களால் கால்கட்டை விரல்களைத் தொடவும். அடுத்து முழங்கால்களைத் தூக்கி மார்புடன் இறுக அனைத்துக்கொள்ளவும். அடுத்துத் தரையில் நின்றவாறு முழங்காலை வளைக்காமல் தரையைத் தொடவும். இந்த அசைவுகளை பத்து நிமிஷங்களுக்கு மாற்றி மாற்றிச் செய்யும். உடலில் ரத்த ஓட்டம் விரைவாகிச் சுறுசுறுப்பு மிகும்.

* டுக்கையை விட்டு எழுந்தவுடன் வீட்டுக்கு வெளியே வந்து காலை வெயிலையும் காற்றையும் உடலில் படும்படி செய்யவும், பறவைகளின் கூச்சலும், மக்கள் நடமாட்டமும் உடலுக்கு உத்வேகமளிக்கும்.

* விழித்தவுடன் ஒரு துவாலை அல்லது பிரஷ்ஷினால் உடல் முழுவதையும் வட்டமான அசைவுகள் மூலம் தேய்க்கவும். இதனால் ரத்த ஒட்டம் விரைவடையும். உடனே வெதுவெதுப்பான நீரில் குளித்துவிட்டு ஒரு ஸ்பூன் தேங்காயெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை உடல் முழுவதும் தேய்த்து விடவும்.

* காலை உணவில் அதிகமான புரதம் உள்ள பொருள்களைச் சேர்த்துக்கொண்டால் பகல் முழுவதும் உழைக்கத் தேவையான ஆற்றல் கிடைக்கும். இரண்டு இட்லி, ஒரு வாழைப்பழம், ஒரு தம்ளர் பால் அல்லது மோர் என்பது சமநிலை உணவுக்கு ஓர் எடுத்துக்காட்டு.

* காலையில் எழும்போது மனதுக்கு பிடித்தமான இசை கேட்கும்படி செய்தால் மனம் அமைதியடையும்.

* காலையில் எழுந்தவுடன் மனதுக்கு சந்தோஷமான ஒரு காரியம் நடக்குமாறு ஏற்பாடு செய்துகொள்ள வேண்டியதுதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com