வைபவ் சூர்யவன்ஷியை சமூக வலைதளங்கிலிருந்து பாதுகாக்கிறோம்! - ராகுல் ட்ராவிட்!

Vaibhva suryavanshi
Vaibhva suryavanshi
Published on

வைபவ் சூர்யவன்ஷி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் கோச் ராகுல் ட்ராவிட் பேசியிருக்கிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி, இந்திய கிரிக்கெட் உலகில் ஒரு புதிய நம்பிக்கை நட்சத்திரமாக வேகமாக வந்து கொண்டிருக்கிறார். தனது 14 வயதிலேயே ஐபிஎல் களத்தில் நுழைந்து பல சாதனைகளை படைத்து வரும் இவரது பயணம் வியக்கத்தக்கது.

2011 ஆம் ஆண்டு பிஹாரில் பிறந்த வைபவ், சிறு வயதிலேயே கிரிக்கெட் மீது தீராத காதல் கொண்டார். தந்தை ஒரு விவசாயியாக இருந்தபோதும், மகனின் கிரிக்கெட் கனவுகளுக்காக தனது நிலத்தை விற்று உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பது வயதில் உள்ளூர் கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெறத் தொடங்கிய வைபவ், குறுகிய காலத்திலேயே தனது திறமையால் அனைவரையும் கவர்ந்தார்.

2024 ஆம் ஆண்டு, தனது 12 வயதில் பிகார் அணிக்காக ரஞ்சி கோப்பையில் அறிமுகமாகி, முதல்தர கிரிக்கெட்டில் மிக இளம் வயதில் அறிமுகமான இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். அதே ஆண்டில், U-19 இந்திய அணியில் இடம்பிடித்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 58 பந்துகளில் சதம் விளாசி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

2025 ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வைபவ்வை ₹1.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தபோது, ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். ஏப்ரல் 19, 2025 அன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் தனது ஐபிஎல் கரியரைத் தொடங்கிய அவர், முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அசத்தினார்.

ஆனால், அவரது கிரிக்கெட் பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்தது குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டி. அந்தப் போட்டியில் வெறும் 35 பந்துகளில் சதம் விளாசி, ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரர் மற்றும் மிக இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற புதிய சாதனைகளை அவர் படைத்தார்.

இப்படியான நிலையில் இவர் குறித்து கோச் பேசியதைப் பார்ப்போம், “வைபவ் விஷயத்தில் எந்தவித கட்டுபாடும் நாங்கள் விதிப்பதில்லை. சிறு பிள்ளை என்பதால், மனதளவில் அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. இந்த ஐபிஎல் சீசனின் போது அவர் நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்கிறார். எனவே நாங்கள் அவரது விஷயத்தில் மிகவும் பொறுமையாக இருப்போம். பொறுமையாக இருப்பது மிகவும் முக்கியம். எனக்கு ஒரு 16 வயது மகன் இருக்கிறான். அதனால் வைபவை சுற்றி உள்ள விஷயங்களை கற்றுக் கொடுத்து அவரை கவனித்துக் கொள்ள முயற்சிக்கிறோம். குறிப்பாக சமூக ஊடக விஷயங்களில் இருந்து அவரை பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்கிறோம்.” என்று பேசியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
இன்று சொகுசு ஹோட்டல்களாக மாறியிருக்கும் அன்றைய 7 அரண்மனைகள்!
Vaibhva suryavanshi

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com