மேற்கு மாம்பலம் பெண்ணுக்கும், பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கும் பிறக்கப்போகும் குழந்தை!

மேற்கு மாம்பலம் பெண்ணுக்கும், பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கும் பிறக்கப்போகும் குழந்தை!
Published on

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் பிரபல ஆல்ரவுண்டராகவும், தற்போது ஆர்சிபி அணிக்காகவும் விளையாடி வருபவர் க்ளென் மேக்ஸ்வெல். இவருக்கும், சென்னை மேற்கு மாம்பலத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் பெண் வினி ராமனுக்கும், கடந்தாண்டு மார்ச் மாதம் 27-ம் தேதி, தமிழ் முறைப்படி மஞ்சள் பத்திரிகை அடிக்கப்பட்டு திருமணம் நடந்தது.

சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த வினி ராமன், ஆஸ்திரேலியாவில் ஃபார்மஸி படிப்பு முடித்து, அங்கேயே வசித்து வந்த நிலையில், மேக்ஸ்வெல்லுடன் சந்திப்பு ஏற்பட்டு பின்னர் நாளடைவில் இருவருக்குள்ளேயும் காதலாக மாறியது. சில ஆண்டுகளுக்குப் பின் இவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்ட, இனிதாக திருமணமும் நடந்தேறியது.

இந்நிலையில், அவர்களின் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையின் ஆதாரமாக, தற்போது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள வினி, 'க்ளென்னும், நானும் எங்கள் ரெயின்போ பேபியை செப்டம்பர் 2023ல் வரவேற்கவுள்ளோம்' என்று தெரிவித்துள்ளார்.

அதோடு, இந்தப் பயணம் மிகவும் சுமூகமானதாகவோ அல்லது எளிதானதாகவோ இல்லை என்பதை நாம் ஒப்புக்கொள்வது மிகவும் முக்கியம். கருவுறுதல் அல்லது இழப்புடன் போராடும் மற்ற ஜோடிகளுக்கு நாங்கள் எங்கள் அன்பையும் வலிமையையும் பகிர்ந்துகொள்கிறோம். என்று கூறியுள்ளார்.

பின்னர், வானவில் குழந்தை என்பதற்கான அர்த்தத்தை பற்றி குறிப்பிடும்போது, வானவில் குழந்தை என்பது கருச்சிதைவு, எக்டோபிக் கர்ப்பம், மோலார் கர்ப்பம், மருத்துவ காரணங்களுக்காக கலைப்பு, பிரசவத்தின்போது குழந்தை இறந்து பிறந்தாலோ அல்லது பிறந்தபின் இறந்தாலோ, இதுபோன்ற எதாவது ஒரு வகையில் கருவை இழந்த பின் பிறக்கும் பிறந்த குழந்தையே வானவில் குழந்தை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவரது இந்த பதிவிற்கு பிரபலங்களும், ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com