CSK Vs RR: தோனி பெல்ட் அணிந்ததற்கு இப்படி ஒரு காரணமா? வெளியான தகவல்!

MS Dhoni in IPL match
MS Dhoni
Published on

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணியின் வீரர் தோனி, இடுப்பில் பெல்ட் அணிந்து விளையாடியது குறித்தத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இரண்டு ஆண்டுகளாகவே தோனி ஐபிஎல் தொடரில் தனது ஓய்வை அறிவிப்பார் என்று செய்திகள் வந்துக்கொண்டே இருந்தன. ஆனால், தோனி ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடி வருகிறார். அந்தவகையில், நடப்பு ஐபிஎல் தொடரில் தோனி தனது கேப்டன்ஸியை ருதுராஜிடம் கொடுத்தார். சென்ற ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். அந்தத் தொடர் முடிந்தவுடனே தோனி அறுவை சிகிச்சை செய்தார். இருப்பினும், முழங்காலில் தசை நார் கிழிசல் இருப்பதாகவே சொல்லப்படுகிறது.

Dhoni Belt in match
Dhoni Belt

ஆகையால் இந்தாண்டு ஐபிஎல் தொடரில், அவர் ஓடி ரன்கள் எடுப்பதைத் தவிர்த்து வந்தார். அதேபோல் கடைசி ஓவர்களில் மட்டுமே களமிறங்கி பெரிதளவில் சிக்ஸ், பவுண்டரிஸ் மட்டுமே அடித்தார். அவ்வப்போது மட்டுமே ரன்கள் ஓடினார். இதனைப் பயன்படுத்தி எதிரணிகள், பல யுக்திகளைக் கையாண்டு அவரது ரன்களைக் கட்டுப்படுத்துகின்றனர்.

இதற்கிடையே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி இடுப்பில் பெல்ட் அணிந்திருந்தார். அந்த பெல்ட் இடுப்பு வலி வராமல் இருப்பதற்கு மருத்துவர்கள் பரிந்துரைத்த பெல்ட்டாகும். போட்டியின்போது அதனை அடிக்கடி அவர் சரி செய்துக் கொண்டே இருந்தார். அதேபோல், சென்னை அணி பேட்டிங்கின் போது அறையில் இருந்த தோனி அந்த பெல்ட்டை முதுகில் அணிந்திருந்தார். இதனால் அவர் முதுகு மற்றும் இடுப்பு வலியால் அவதிப்படுகிறார் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக, அறுவை சிகிச்சை செய்தபின் சிலருக்கு முதுகு வலி அல்லது  இடுப்பு வலி ஏற்படும், அப்போது இந்த பெல்ட்டை அணிந்துக் கொள்வார்கள்.

இதையும் படியுங்கள்:
IPL 2024: “இதுதான் என்னுடைய கடைசி” – ரோஹித் ஷர்மா பேசிய வீடியோ!
MS Dhoni in IPL match

அந்தவகையில் தோனி கடுமையான வலியுடன் விளையாடி வருவது தெரிகிறது. சிஎஸ்கே அணியில் வேறு அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர்கள் யாரும் இல்லாத நிலையில் அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார். சிஎஸ்கே அணியில் இருந்து காயம் காரணமாக விலகி இருக்கும் நியூசிலாந்தின் டெவான் கான்வே விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் ஆவார். அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இருப்பதால் தோனி விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆரவல்லி அவனிஷ் என்ற இளம் வீரர் மட்டுமே விக்கெட் கீப்பராக சிஎஸ்கே அணியில் இடம்பெற்று இருக்கிறார். இந்தநிலையில் தோனி, அணியின் நலனுக்காக வலியுடன் விளையாடி வருவதாக சிஎஸ்கே வட்டாரம் தெரிவித்து இருக்கிறது. இதனால் அவர், 2025 ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பே இல்லை எனவும், இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் அவர் ஓய்வு பெற்று விடுவார் எனவும் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com