டி20 உலககோப்பையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார்? இளம் வீரரைக் குறி வைக்கும் ரோஹித்!

Rohith sharma and Rahul Dravid
Rohith sharma and Rahul Dravid

ஐபிஎல் தொடருக்குப் பின்னர் உலககோப்பை டி20 தொடர் ஆரம்பமாகவுள்ளது. இரண்டு மாதங்களே உள்ள நிலையில் இந்திய அணியில் யார் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்றக் குழப்பம் நீடித்து வருகிறது. இதனையடுத்து ரோஹித் ஷர்மா மற்றும் ராகுல் ட்ராவிட் இருவரும் ஒரு இளம் வீரரை இந்திய அணியில் கொண்டு வரலாமா என்றுத் திட்டமிடுகின்றனர்.

இந்திய அணியில் விக்கெட் கீப்பராக வெகுக்காலம் செயல்பட்டு வந்த ரிஷப் பண்ட் காயம் காரணமாகஒரு ஆண்டு காலமாக கிரிக்கெட் பக்கம் வராமல் ஓய்வில் இருந்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளார். இதில் அவர் பழைய ஃபார்மில் விளையாடுகிறாரா என்பதைப் பார்த்துவிட்டுதான் டி20 உலககோப்பையில் விளையாடுவாரா என்பதுத் தெரியவரும். அதேபோல் அவர் வெகுக்காலம் கழித்து விளையாடப் போவதால் தொடர்ந்து அவர் அடுத்தத் தொடரிலும் விளையாட உடல் ஒத்துழைக்குமா? என்பதைப் பார்த்துவிட்டுதான் முடிவெடுக்க முடியும் என்று நிர்வாகம் கருதுகிறது.

அதேபோல் இந்திய அணியில் மற்றொரு விக்கெட் கீப்பராகச் செயல்பட்டு வந்த இஷன் கிஷன் அன்மையில் பிசிசிஐயின் விதிகளை மீறியதால் கிரிக்கெட்  நிர்வாகம் அதிருப்தியில் உள்ளது. ஆகையால் அவருக்கு அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காது என்றே கூறப்படுகிறது.

ஆகையால் கடைசியாக தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் இந்திய அணியில் ஜிதேஷ் ஷர்மா என்ற வீரர்தான் விக்கெட் கீப்பராகச் செயல்பட்டார். ஆனால் உலககோப்பைக்கு இந்திய அணி நிர்வாகம் வேறோரு மாற்று வீரரைத் தேடி வருகிறது.

இந்தநிலையில்தான் சமீபத்தில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இளம் வீரர் துருவ் ஜுரேலை தேர்ந்தெடுக்கலாமா என்ற யோசனை ரோஹித்திற்கும் ராகுல் ட்ராவிடிற்கு தோன்றியுள்ளது. இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மா துருவின் திறமையைப் பற்றித் தெரியாமல் அரை மனதாகவே அணிக்காக விளையாட வைத்தார். ஆனால் இந்திய அணிக்காகக் களமிறங்கிய துருவ் தனது முழுத் திறமையும் வெளிப்படுத்திச் சிறப்பாக விளையாடினார்.

இதையும் படியுங்கள்:
“ஈ சலா கப் நம்து” கோப்பையைக் கைப்பற்றிய RCB மகளிர் அணி... கேப்டன் ஸ்மிருதி நெகிழ்ச்சி!
Rohith sharma and Rahul Dravid

இதனால்தான் அவரை மீண்டும் டி20 அணியில் விளையாட வைக்கலாமா என்ற எண்ணம் அவர்களுக்கு எழுந்துள்ளது. இதனைப் பற்றி இந்திய அணி நிர்வாகமும் யோசித்து வருகிறது. மேலும் ஐபிஎல் தொடரில் அவர் எப்படி விளையாடுகிறார் என்பதைப் பார்த்துவிட்டு டி20 அணியில் விளையாட வைக்கலாமா என்பது குறித்து அணி நிர்வாகம் முடிவுசெய்யும்.

இதனையடுத்து மே 1ம் தேதி உலககோப்பைக்கான வீரர்கள் பட்டியல் வெளியாகவுள்ளது. அதில் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரான துருவின் பெயர் இடம்பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com