

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த சில சீசனங்களாக சொதப்பி வருகிறது. கேப்டன் தோனியின் தலைமையின் கீழ் 5 கோப்பைகளை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ், அவருக்குப் பின் சாதுர்யமான மற்றும் சிறந்த கேப்டனை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் நீடித்தது.
தோனி இருக்கும் போதே ஒருசில போட்டிகளில் ரவீந்திரா ஜடேஜா கேப்டனாக செயல்பட்டார். ஆனால் அவரது செயல்பாடுகள் வெற்றியைத் தராத நிலையில், கேப்டன்சி வாய்ப்பு ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த ஐபிஎல் சீசனில் காயம் காரணமாக மகேந்திர சிங் தோனி தொடர் முழுவதுமே விளையாடவில்லை. இந்நிலையில் அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா என்பது குறித்து விரைவில் தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சிஎஸ்கே அணியின் புதிய பயிற்சியாளர் அளித்த முக்கிய அப்டேட் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. இதன்படி வருகின்ற செப்டம்பர் 20ஆம் தேதி சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் யார் என்ற விவரத்தை அணி நிர்வாகம் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
கடந்த சீசனில் மீண்டு வரும் என நினைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் ஏமாற்றமே மிச்சம். இந்நிலையில் அடுத்த சீசனில் அணியை வலிமையாக கட்டமைக்க அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையில் 19 சீசன்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த ஃபிளெம்மிங் சமீபத்தில் தனது பதவியில் இருந்து விலகினார்.
இந்நிலையில் அடுத்த சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே பயிற்சியாளரை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் அணி நிர்வாகம் இருக்கிறது. ஐபிஎல் கிரிக்கெட் வட்டாரங்கள் வெளியிட்ட தகவலின்படி தோனியுடன் பணியாற்றிய ஒருவர் தான் பயிற்சியாளராக வரப் போகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
இதன்படி சுரேஷ் ரெய்னா, மைக் ஹஸ்ஸி, இயான் மோர்கன், பிரண்டன் மெக்கல்லம் மற்றும் மேத்யூ ஹெய்டன் ஆகியோரில் ஒருவர் தான் பயிற்சியாளராக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த பிரண்டன் மெக்கல்லம், சமீபத்தில் டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். இதனால் மெக்கல்லம் சிஎஸ்கே அணிக்கு பயிற்சியாளராக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கருதப்படுகிறது.
அதேபோல் மைக் ஹஸ்ஸியும் சிஎஸ்கே அணியுடன் தொடர்ந்து நெருக்கமாக இருந்து வருவதால் அவருடைய பெயரும் பயிற்சியாளர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வருகின்ற செப்டம்பர் 20ஆம் தேதி புதிய பயிற்சியாளர் யார் என்பதை அணி நிர்வாகம் அறிவிக்க உள்ளது.
கடந்த சில சீசன்களாக சிஎஸ்கே அணி தொடர்ந்து சொதிப்பி வரும் நிலையில், பிளே ஆஃப்புக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறி வருகிறது. இதற்கு முன்பெல்லாம் பிளே ஆஃப் சுற்று என்றாலே அதில் சிஎஸ்கே அணி நிச்சயமாக இடம் பிடித்து விடும். ஆனால் இப்போது நிலைமையே வேறாக உள்ளது.
கடந்த சீசனில் இளம் வீரர்களை களமிறக்கியும் பயனில்லாமல் போனது. அடுத்த சீசனில் புதிய பயிற்சியாளரின் தலைமையின் கீழ் சிஎஸ்கே அணி விளையாட இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதோடு தோனி அடுத்த சீசனில் விளையாட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இருப்பினும் ஐபில் தொடங்குவதற்கு முன்பே அதிகாரப்பூர்வத் தகவல் கிடைக்கும்.