இமாலய சாதனையைப் படைக்குமா இந்தியா? கிரிக்கெட் வரலாற்றில் இடம்பிடிக்குமா ரோஹித் அணி!

Indian team
Indian team

இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக இமாலயச் சாதனையை நோக்கி இந்திய அணி முன்னேறிக் கொண்டு வருகிறது. அடுத்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் நிச்சயம் அந்த சாதனையைப் படைக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

இந்தியா – இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணி தனது சொந்த மண்ணில் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை எதிர்க்கொண்டது. அதன்பின்னர் ஒரு திட்டத்துடன் களமிறங்கிய ரோஹித் தலைமையிலான இந்திய அணி அடுத்தடுத்து மூன்று டெஸ்ட் போட்டிகளில் வென்று தொடரைக் கைப்பற்றியது. இந்தியா அணி 5 போட்டிகளிலுமே வென்று தொடரை வெல்ல வேண்டும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் முதல் போட்டியில் தோல்வியடைந்ததால் அந்தக் கனவு கனவாகவே ஆனது.

இந்நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 7ம் தேதி நடைபெறவுள்ளது. இந்திய அணி தொடரைக் கைப்பற்றிய பிறகும் கூட இந்த ஐந்தாவது டெஸ்ட் இரு அணிகளுக்கும் முக்கிய டெஸ்ட் போட்டியாக உள்ளது. டெஸ்ட் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதல் இரண்டு இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பும், ஐந்தில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்ற சாதனையும் இந்த கடைசி டெஸ்ட் போட்டியின் மூலம்தான் இந்திய அணிக்குக் கிடைக்கும். இவை இரண்டையும் தடுக்கும் கடமை இங்கிலாந்து அணிக்கு உள்ளது.

இதுவரை இந்திய அணி ஐந்தில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்றதே இல்லை. குறிப்பாக ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுபோன்ற சம்பவம் மூன்று முறை மட்டுமே நடந்துள்ளது. இந்த கடைசி போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் நான்காவது முறையாக இந்திய அணி சாதனைப் படைக்கும்.

இதையும் படியுங்கள்:
5 வது டெஸ்ட் போட்டில் பவுலர்ஸ் லைனப்பில் சிக்கல்.. BCCI யாரைத் தேர்ந்தெடுக்கும்?
Indian team

1897ம் ஆண்டு மற்றும் 1901ம் ஆண்டு இங்கிலாந்து அணியை எதிர்த்து டெஸ்ட் போட்டியில் விளையாடியது ஆஸ்திரேலியா அணி. இந்த இரண்டு ஆண்டுகளிலுமே ஆஸ்திரேலியா அணி முதல் போட்டியில் தோற்றுவிட்டு அடுத்த நான்கு போட்டிகளிலும் வென்றது. அதேபோல் 1911ம் ஆண்டு ஆஸ்திரேலியாவைப் பழி வாங்கும் விதமாக இங்கிலாந்து அணி அந்த சாதனையைப் படைத்தது. இதுதான் கடைசி முறை. இதன்பின் இப்படி ஒரு சாதனையை யாருமே படைத்ததே இல்லை. இந்தநிலையில் இங்கிலாந்தை எதிர்த்து விளையாடும் இந்திய அணி அதன் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் மட்டும் வெற்றிபெற்றால் ரோஹித் தலைமையிலான இந்திய அணி வரலாற்றில் பேசப்படும் என்பதில் சந்தேகமே இல்லை.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com