உலகக் கோப்பை கிரிக்கெட்: இறுதிச்சுற்றுக்கு முன்னேறுமா இந்தியா?

Will India Enter Finals by beating New Zealand in Semi Finals?
Will India Enter Finals by beating New Zealand in Semi Finals?

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் 2023 போட்டியில் லீக் போட்டிகளில் பங்கேற்ற 9 ஆட்டத்திலும் வென்ற ஒரே அணி இந்தியாதான். புள்ளிப்பட்டியலிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்த நிலையில் புதன்கிழமை நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா, கடந்த உலகக் கோப்பை போட்டியில் ரன்னர் இடத்தைப் பெற்ற நியூஸிலாந்து அணியை எதிர்த்து மோதுகிறது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இந்த ஸ்டேடியத்தில்தான் 12 ஆண்டுகளுக்கு முன்பு எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி டிராபியை வென்றது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1983ம் ஆண்டிலிருந்து உலக கோப்பை லீக் போட்டியில் இந்தியாவின் ஆட்டத்தை மதிப்பிட்டால்  இந்திய அணி, மொத்தம் பங்கேற்ற 7 போட்டிகளில் 1983, 2003 மற்றும் 2011ல் மட்டும்தான் உலக கோப்பை அரையிறுதியில் வென்றுள்ளது.

1983ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி வென்றது. இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியை இறுதிப் போட்டியில் வென்று இந்தியா கோப்பையை தட்டிச் சென்றது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற உலக கோப்பை போட்டிகளில் 1987, 1992 மற்றும் 1996களில் நடைபெற்ற அரையிறுதியில் 1987ல் இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்றது. 1992ல் லீக் போட்டியில் தோல்வி அடைந்தது.1996ம் ஆண்டு இலங்கை அணியிடம் தோல்வி கண்டது.

2003ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்தியா அரையிறுதியில் கென்யாவை வென்றது. செளரவ் கங்குலி தலைமையிலான அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் கென்யாவை வீழ்த்தியது. எனினும் இறுதிப் போட்டியில் ரிக்கி பான்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி கண்டது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது.

2007ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் ராகுல் திராவிட் தலைமையிலான இந்திய அணி, ஆரம்பக் கட்டத்திலேயே வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது. இந்த தோல்வியை அடுத்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

2011ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற அரையிறுதியில் பாகிஸ்தானை வென்றது. இறுதிப் போட்டியில் இலங்கையையும் வென்று  இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது.

2015ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் சிட்னி மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதின. ஆஸ்திரேலியா 328 ரன்கள் குவித்தது. விராட் கோலி சிறப்பாக விளையாடி சதம் எடுத்த போதிலும் இந்திய அணி ஆஸ்திரேலிய பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 233 ரன்களுக்கு வீழ்ந்தது. ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை சந்தித்தது.

இதையும் படியுங்கள்:
அரையிறுதி சவாலை இந்தியா சந்திக்கும்: ராகுல் திராவிட்!
Will India Enter Finals by beating New Zealand in Semi Finals?

2019ம் ஆண்டு நடைபெற்ற அரையிறுதியில் நியூஸிலாந்து முதலில் பேட் செய்து 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா அதிரடியாக ஆடி 77 ரன்கள் எடுத்தார். கேப்டன் எம்.எஸ்.தோனி 72 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். ஆனால், இந்திய அணி 216 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார். இதைத் தொடர்ந்து இந்திய அணி 221 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தப் போட்டியில் நியூஸிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இன்று நடைபெறும் அரையிறுதியில் இந்தியா, நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது. தொடர் வெற்றியை பெற்றுள்ள இந்திய அணி நியூஸிலாந்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறுமா அல்லது நியூஸிலாந்தின் நிர்பந்தத்துக்கு அடிபணியுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com