
ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் ‘நாங்கள் சளைத்தவர்கள் அல்ல’ என்பதை நிரூபித்து வருகின்றனர். ஐடி, பொருளாதராம், விளையாட்டு என அனைத்து துறைகளிலும் ஆண்களை பின்னுக்கு தள்ளி சாதனை புரிந்து வருகின்றனர் பெண்கள். அந்த வகையில் கிரிக்கெட் என்றால் ஆண்களுக்கு மட்டுமே என்பதை உடைத்தெறிந்து எங்களாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து பெண்களும் கிரிக்கெட்டியில் இறங்கி சாதித்து வருகின்றனர்.
சமீபகாலமாக பெண்கள் கிரிக்கெட் வீராங்கனைகள் அனைத்து நாட்டு வீராங்கனைகளுக்கும் சாவல் விடும் வகையில் பல சாதனைகளை புரிந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தரவரிசை பட்டியலிலும் மற்ற நாட்டு வீராங்கனைகளை பின்னுக்கு தள்ளி இந்திய கிரிட்கெட் வீராங்கனைகள் முன்னேறி வருகின்றனர். அந்த வகையில் இந்திய பேட்டர்களின் தரவரிசையில் இந்திய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஒரு இடம் உயர்ந்து 727 புள்ளிகள் பெற்றும் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக உள்ள ஸ்மிருதி தமது 16 வயதில் 2013ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் களம் புகுந்தார்.
தனது திறமையான ஆட்டத்தில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். மகளிர் இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனைகளில் அதிவேகமாக 4,000 ஒருநாள் ரன்களை எடுத்தவர் என்ற சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா, சர்வதேச அளவில் இந்த சாதனையை செய்த மூன்றாவது வீராங்கனை ஆவார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பெண்கள் ஒரு நாள் போட்டி வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் பேட்டர்களின் தரவரிசையில் இந்திய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஒரு இடம் உயர்ந்து மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். கடைசியாக 2019-ம் ஆண்டில் நம்பர் ஒன் ஆக வலம் வந்த மந்தனா தற்போது மொத்தம் 727 புள்ளிகள் பெற்று இருக்கிறார். விரைவில் தொடங்கும் இங்கிலாந்து தொடரில் ரன் வேட்டை நடத்தினால் தனது புள்ளி எண்ணிக்கையை மேலும் வலுப்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது. ஒருநாள் தரவரிசை பட்டியலில் மந்தனா தொடர்ந்து முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை முதலிடத்தில் இருந்த தென்ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட், சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் ஜொலிக்காததால் ஒரு இடம் குறைந்து 719 புள்ளிகளுடன் இங்கிலாந்து கேப்டன் நாட் சிவெருடன் 2-வது இடத்தை பகிர்ந்துள்ளார். பந்து வீச்சாளர் தரவரிசையில் இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய தரப்பில் அதிகபட்சமாக தீப்தி ஷர்மா 4-வது இடத்தில் உள்ளார்.