Women's Premier League dates announced by BCCI.
Women's Premier League dates announced by BCCI.

மகளிர் பிரீமியர் லீக் தேதிகளை அறிவித்தது BCCI.

இந்த ஆண்டின் இரண்டாவது சீசனுக்கான மகளிர் பிரீமியர் லீக் (WPL 2024) போட்டிக்கான தேதிகளை வெளியிட்டது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.). இந்த போட்டிகள் பிப்ரவரி 23 இல் தொடங்கி மார்ச் 17 ஆம் தேதி வரை நடைபெறும். மேலும் பெங்களூரு மற்றும் தில்லி ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே இந்த போட்டிகள் நடைபெறும்.

போட்டியின் முழு அட்டவணையையும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இதன்படி முதல்போட்டி நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன் மற்றும் கடந்த ஆண்டு இறுதிச்சுற்றில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே பெங்களூருவில் நடைபெறுகிறது. இறுதிப் போட்டி மார்ச் 17 இல் தில்லியில் நடைபெறும்.

முந்தைய போட்டிகளிலிருந்து சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் இரவு 7.30 மணிக்கு தொடங்கும். முதல் கட்டமாக 11 போட்டிகள் பெங்களூருவிலும் மீதி 11 லீக் போட்டிகள் மற்றும் இரண்டு பிளே ஆஃப் போட்டிகள் தில்லியிலும் நடைபெறும்.

நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸ் மற்றும் கடந்த ஆண்டில் இரண்டாம் இடத்தை பிடித்த டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும். பிப். 24 ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் உ.பி. வாரியார்ஸ் இடையிலான போட்டி சின்னசுவாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. அடுத்த போட்டியில் மும்பை இண்டியன்ஸ் குஜராத் ஜெயண்ட்ஸ் உடன் மோதுகிறது.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியமான உறக்கம் பெற ஆறு வழிகள்!
Women's Premier League dates announced by BCCI.

தில்லியில் நடைபெறும் லீக் போட்டிகள் மார்ச் 5 இல் தொடங்குகிறது. முதல் போட்டியில் தில்லி கேபிடல்ஸ், மும்பை இண்டியன்ஸை எதிர்கொள்கிறது. இந்த போட்டி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும். மார்ச் 13 ஆம் தேதி வரை தொடர்ந்து போட்டிகள் நடைபெறும். லீக் போட்டிகளில் அதிக புள்ளிகள் எடுக்கும் அணி இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறும்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்துக்கான போட்டிகள் மார்ச் 15 இல் நடைபெறும். இதில் வெற்றிபெறும் அணிகள் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறும். அந்த போட்டி மார்ச் 17 இல் நடைபெறும். வெற்றிபெறும் அணிக்கு கோப்பை வழங்கப்படும்.

logo
Kalki Online
kalkionline.com