ஆரோக்கியமான உறக்கம் பெற ஆறு வழிகள்!

Six ways to get healthy sleep
Six ways to get healthy sleepmangpor_2004

ழ்ந்த அமைதியான தூக்கம் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைத்து, நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், இழந்த சக்தியை மீண்டும் பெறவும் உதவக் கூடியது. தூக்கத்தை எளிதில் பெற நாம் பின்பற்ற வேண்டிய ஆறு வழிமுறைகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஒவ்வொரு நாளின் இருபத்து நான்கு மணி நேரத்தில் ஆறிலிருந்து ஏழு மணி நேரத்தை தூக்கத்திற்காக ஒதுக்குவது மிகவும் அவசியம். அதற்காக ஒரு அட்டவணை தயார் செய்து, தூங்கச் செல்லும் நேரம் மற்றும் எழுந்துகொள்ளும் நேரத்தை அதில் குறிப்பிட்டு, பின் தினசரி ஏழு மணி நேர தூக்கம் கிடைக்குமாறு அட்டவணையை ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டும்.

ஒழுங்குபடுத்திய அட்டவணையைப் பின்பற்றி தினசரி படுக்கும் மற்றும் எழுந்துகொள்ளும் நேரத்தை ஒரேமாதிரி ஆக்கிக்கொள்ள வேண்டும். இது தினமும் ஒரே அளவான தூக்கம் பெற உதவும்.

தூங்குவதற்காக குறித்துக்கொண்ட நேரத்தில் ஸ்மார்ட் போன் மற்றும் தொலைக்காட்சி பார்ப்பது, பாட்டு கேட்பது போன்றவற்றை தவிர்த்து விடுங்க. இவை உள் மனதிற்குள் ஸ்ட்ரெஸ் உண்டாக்கும் காரணிகள் என்பதை உணருங்கள்.

படுக்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே டின்னரை முடித்துக் கொள்ளுங்கள். டின்னர் ஹெவியாகவும், காஃபைன் அடங்கியதாகவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அவை வீக்கத்தை உண்டாக்கவும், ஆசிட் மேல் நோக்கி தொண்டைக்கு வரும் ஆபத்தையும் உண்டுபண்ணும்.

இதையும் படியுங்கள்:
சிரிப்பின் மகத்துவத்தை புரிந்து கொள்ளுங்கள்!
Six ways to get healthy sleep

ஆழ்ந்த உறக்கத்திற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். உடற்பயிற்சி செய்வதால் உடல் களைப்படையும்; ஸ்ட்ரெஸ் குறையும். இவை படுத்தவுடன் தூக்கத்தை வரவழைக்க உதவும். ஆகவே, தினசரி ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

ஸ்ட்ரெஸ் மற்றும் அதிக யோசனையானதும் தூக்கமின்மையைக் கொண்டு வரும். இதைத் தவிர்க்க, படுக்கைக்குச் செல்லும் முன் பத்து நிமிடம் மெடிட்டேஷன் செய்வது நன்மை தரும். தூக்கம் ஒரு வரம். அதை பெறுவதற்கு நல்ல பழக்க வழக்கங்களைப் பின்பற்றத் தயங்காதீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com