ஆஸ்திரேலிய தொடருக்கான மகளிர் டி20 அணி! பிசிசிஐ அறிவிப்பு!

Womens Cricket
Womens Cricket
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

மகளிர் டி20 தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் இந்திய மகளிர் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய மகளிர் அணியினர் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளனர். இவ்விரு அணிகள் இடையிலான முதல் டி20 போட்டியில் மும்பை டிஒய் பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 9ம் தேதி தொடங்குகிறது.

இந்தத் தொடருக்கான இந்திய மகளிர் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணிக்கு ஹர்மன் பிரீத் கவுர் தலைமை தாங்குகிறார். ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

இந்த போட்டியில் இந்திய பெண்கள் அணியில், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, யாஷ்டிகா பாடியா (விக்கெட் கீப்பர்), ஜெமிமா ரோட்ரிகஸ், தீப்தி ஷர்மா, ராதா யாதவ், ராஜேஷ்வரி கெய்க்வாட், ரேனுகா சிங் தாகூர், மேக்னா சிங், அஞ்சலி ஷர்வானி, தேவிகா வாய்ட்யா, எஸ் மேக்னா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஹார்லின் டியோல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்..

பயிற்சி பந்து வீச்சாளர்களாக மோனிகா பட்டேல், அருந்ததி ரெட்டி, எஸ்பி போகர்கர், சிம்ரன் பகதூர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். டிசம்பர் 9ம் தேதி தொடங்கும் போட்டிகள் டிசம்பர் 11, 14, 17, 20 ஆகிய தேதிகளில் மஹாராஷ்டிரா மாநிலத்தின் டி ஒய் பட்டில் மற்றும் CCI பிரபோர்ன் மைதானங்களில் நடைபெறவுள்ளன. தற்போதைய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com