சஹாரா பாலைவனத்தில் நடைபெறும் இந்த மாரத்தான் சவாலான சூழல் காரணமாக கடினமான ஒன்றாகக் கருதப்படுகிறது. மொராக்கோ நாட்டில் உள்ள சகாரா பாலைவனம் பகுதியில் 156 மைல்கள் நடக்கும் மாரத்தான் போட்டி இது. 6 நாட்கள் நடைபெறும். இந்தப் போட்டி 151 மைல்கள் அல்லது ஐந்தரை மாரத்தான்களை கடந்து செல்கிறது. மிக நீளமான பாலைவன பாதை வழியாக 50 மைல்கள் தூரத்தை உள்ளடக்கியது. அது மட்டுமல்ல, போட்டியாளர்கள் தங்கள் சொந்த உணவு மற்றும் மருத்துவப் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும், இருப்பினும் வழியில் தண்ணீர் கூடாரங்கள் உள்ளன. ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் போட்டி இது.
பிரான்ஸ் நாட்டில் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் நடக்கும் 9600 மீட்டர் மலை ஏறும் போட்டி. அல்ட்ரா டிரெயில் டு மாண்ட் பிளாங்க் (UTMB) என்பது ஒரு புகழ்பெற்ற மலை ஓட்டப்பந்தயமாகும். இது பிரான்ஸ், இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து வழியாக ஐரோப்பாவின் மிக உயரமான சிகரமான மாண்ட் பிளாங்க் மலையைச் சுற்றி 170 கிமீ தூரத்தை ஓடும் ஒரு பந்தயம். 2003 இல் தொடங்கப்பட்ட இந்த பந்தயம், மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது. ஆகஸ்ட் மாத இறுதியில் இப்போட்டி நடைபெறுகிறது.
கனடா - ஆர்க்டிக் அல்ட்ரா பனிப்பாதையில் நடக்கும் 6633 மீ போட்டி. கனடாவில் பல ஆர்க்டிக் அல்ட்ரா மராத்தான் போட்டிகள் உள்ளன. இதில் மிகவும் பிரபலமானது 6633 Arctic Ultra ஆகும். இது கனடாவின் யுகோன் மற்றும் வடமேற்கு பிரதேசங்களில் பனி மற்றும் உறைபனியில் கடுமையான சூழலில் நடைபெறும் மிகவும் கடினமான பந்தயங்களில் ஒன்றாகும். இதில் 120, 250 மற்றும் 380 மைல்கள் போன்ற பல்வேறு தூரங்களில் பந்தயங்கள் நடைபெறுகின்றன. பிப்ரவரி மாத தொடக்கத்தில் நடைபெறும்.
நார்வேயின் ஹார்டேன்சர் ஃபோர்ட் டூ காஸ்டோப்பன் வரை நடக்கும் போட்டி. 5-17 டிகிரி சென்டி கிரேடு கிளைமேட்டில் 5000 மீ மலை ஏறும் போட்டி. எக்ஸ்ட்ரீம் டிரையத்லான் என்பது கடினமான பாதைகளில் நடைபெறும் ஒரு வகை டிரையத்லான் போட்டியாகும், இதில் 3.8 கிமீ நீச்சல்,180 கிமீ சைக்கிள் பந்தயம், 42.2 கிமீ மாரத்தான் ஓட்டம் மற்றும் 5000 மலையேற்றம் முதலியவை அடங்கும். இது மிகவும் கடினமான போட்டி என்பதால் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது (பொதுவாக 250 முதல் 300 வரை). ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும்.
உலகின் மிகக் கடினமான மலைப் பந்தயமாகக் கருதப்படும் தி மோன்டேன் டிராகன்ஸ் பேக் என்பது ஆண்டுதோறும் வேல்ஸில் நடைபெறும் ஆறு நாள், 240 மைல் போட்டியாகும். வடக்கில் உள்ள கான்வி கோட்டையில் தொடங்கி, பங்கேற்பாளர்கள் வேல்ஸின் பிரதான வழியாக கார்டிஃப் கோட்டைக்கு ஓடுகிறார்கள், வழியில் ஸ்னோடோனியாவின் மிக உயர்ந்த 56,000 அடி சிகரங்களையும் பிரெகான் பீக்கன்களையும் கடந்து செல்கிறார்கள். செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் போட்டி.
பெரு நாட்டில் அமேசான் மழை காட்டுப்பகுதியில் நடக்கும் ஜங்கிள் அல்ட்ரா 230 கிமீ தூர போட்டி ஜூன் முதல் வாரத்தில் நடைபெறும். பெரு நாட்டின் மனு தேசிய பூங்காவில், 230 கி.மீ. தூரம், 5 நாட்களில் 5 நிலைகள் நிலப்பரப்பு, காடு மற்றும் மழைக்காடு, மலையேற்றம் முதலியவை அடங்கும், பகல்நேர வெப்பநிலை 20°C – 30°C, மாலை வெப்பநிலை 5°C – 20°C. இந்த பந்தயங்களில் கடுமையான வெப்பம், மழை நீர், சகதியின் ஈரப்பதம் மற்றும் மலைகளில் ஏறி இறங்கும் கலவையான அனுபவங்களை பெறலாம்.
தென் ஆப்ரிக்காவில் நடக்கும் வெஸ்டர்ன் கேப் (Western Cape Town marathon). கேப் எபிக் மலையை ஒட்டி 760 கிமீ கடக்கும் போட்டி. இதில் மலை ஏற்றம், 55,000 மீட்டர் சிங்கிள் ட்ராக், கரடு முரடுரோடு மற்றும் ஆறு கடக்கும் போட்டி உள்ளடங்கியது. கிரீன் பாயின்ட் தொடங்கி கேப் டவுன் ஸ்டேடியத்தில் முடியும். அக்டோபர் மாதம் நடைபெறும் போட்டி.
ஓட்டிலோ ஸ்விம்ருன் (ÖTILLÖ Swimrun) என்பது ஸ்வீடனில் நடக்கும் நீச்சல் மற்றும் ஓட்டப் பந்தயம் இரண்டையும் உள்ளடக்கிய ஒரு விளையாட்டாகும். செப்டம்பரில் நடக்கும் போட்டி. 10 டிகிரி குளிரில் கடலை ஒட்டிய பகுதியில் நடைபெறும் போட்டி. பல தீவுகளை நீச்சல் மூலம் கடக்கும் போட்டி.
டெத் வேலி (Death Valley) போன்ற மிகவும் வெப்பமான இடங்களில் நடக்கும் இந்த மாரத்தான் கடும் சவாலானது. பேட்வாட்டர் அல்ட்ரா மரத்தான் என்பது 135 மைல் (217 கிமீ) ஒரு பந்தயமாகும். இது கலிபோர்னியாவின் டெத் பள்ளத்தாக்கில் உள்ள பேட்வாட்டர் பேசினில் கடல் மட்டத்திலிருந்து 282 அடி (86 மீ) உயரத்தில் தொடங்கி, மவுண்ட் விட்னிக்குச் செல்லும் பாதையான விட்னி போர்ட்டலில் 8,360 அடி (2,550 மீ) உயரத்தில் முடிவடைகிறது. இது ஆண்டுதோறும் ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில் நடைபெறும், அப்போது வானிலை மிகவும் தீவிரமாக இருக்கும், மேலும் பேட்வாட்டர் பேசினில் பகலில் வெப்பநிலை 130 °F (54 °C) ஐ எட்டும்.
வட துருவ மாரத்தான் (North pole marathon) என்பது வட துருவத்தில் கடும் குளிரில் நடைபெறும் ஒரு உலகளாவிய மாரத்தான் போட்டியாகும். இந்த மாரத்தான் ஓட்டப் பந்தயம், ஜூலை மாதம் நடைபெறும் விளையாட்டு. 42 கிமீ, 25 கிமீ, 10 கிமீ தூரம் என பல்வேறு பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது.