மகளிர் பிரிமியர் லீக், அணிகளின் விவரம்! டிசம்பர் 9ம் தேதி மும்பையில் ஏலம்!

Women's Premier League
Women's Premier League
Published on

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் அணிகளுக்கான ஏலம் டிசம்பர் 9 ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் முதலாக நடைபெற்ற மகளிர் ஐபிஎல் போட்டியில் ஐந்து அணிகள் இடம்பெற்றன.

டபிள்யூ.பி.எல். அல்லது மகளிர் பிரீமியர் லீக் மகளிர் கிரிக்கெட்டில் உலகெங்கிலும் உள்ள திறமையான வீரர்களை பரபரப்பான டி-20 போட்டிக்காக ஒன்றிணைத்தது. கடந்த மார்ச் 4 முதல் 26 வரை நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டி, பெண்களின் விளையாட்டுத் திறமை, குழுப் பணி மற்றும் போட்டியின் துடிப்பை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது. 

தொடக்க சீசனில் கடுமையாக போட்டிகளை எதிர்கொண்டு மும்பை இண்டியன்ஸ் பட்டம் வென்றது. மார்ச் 26 இல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மும்பை இண்டியன்ஸ், தில்லி கேபிடல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. போட்டித் தொடர் முழுவதும் மும்பை இண்டியன் அணி நிலையான ஆட்டத்தை கொடுத்தது.

சிறந்த ஆல்ரவுண்டருக்கான விருதை மும்பைய இண்டியன்ஸ் அணியில் ஹேலே மாத்யூஸ் பெற்றார். சிறப்பான ஆட்டத்துக்காக சோஃபி டிவைன் டாடா ஸஃபாரி காரை பரிசாகப் பெற்றார். 

இந்த போட்டிகளுக்கு முன்னதாக நடைபெற்ற ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஸ்மிருதி மந்தனா ரூ.3.4 கோடிக்கு ஏலம் போனார். வெளிநாட்டு அணிகளைச் சேர்ந்த ஆஷ்லி கார்டனர், நாடாலி ஸ்கிவர் ப்ரன்ட், பெத் மூனி ஆகியோரும் நல்ல விலைக்கு ஏலம் போனார்கள். 

இந்த நிலையில் மகளிர் பிரிமீயர் லீக் அணிகளின் உரிமையாளர்கள் தங்கள் அணியில் சிலரை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். பலரை விடுவித்துள்ளனர்.

விவரம்:

தில்லி கேபிடல்ஸ்:

அணியில் உள்ளவர்கள்: அலிஸ் கேப்ஸி, அருந்ததி ரெட்டி, ஜெமிமா ரோட்ரீகஸ், ஜெய் ஜோனாசென், லாரா ஹாரீஸ், மாரிஜானா காப், மெக் லான்னிங், மின்னு மணி, பூனம் யாதவ், ராதா யாதவ், ஷபாலி வர்மா, ஷிகா பாண்டே, ஸ்னேகா தீப்தி, தனியா பாடீயா, டைடஸ் சாது.

விடுவிக்கப்பட்டவர்கள்: அபர்னா மோன்டல், ஜஸியா அக்தர், தா நோரீஸ்.

குஜராத் ஜியன்ட்ஸ்:

அணியில் உள்ளவர்கள்: ஆஷ்லி கார்டனர், பெத் மூனி, தயாளன் ஹேமலதா, ஹர்லின் தியோல், லாரா வால்வார்டிட், ஷப்னம் ஷகீல், ஸ்னேஹ் ரானா, தனுஜா கன்வர்.

விடுவிக்கப்பட்டவர்கள்: அன்னாபெல் சுதர்லாண்ட், அஸ்வினி குமாரி, ஜார்ஜியா வாரேஹம், ஹர்லி காலா, கிம் கார்த், மான்ஸி ஜோஷி, மோனிகா படேல், பரூனிகா சிசோடியா, சப்பினேனி மேகனா, ஸோஃபியா டங்லே, சுஷ்மா வர்மா.

இதையும் படியுங்கள்:
ஐபிஎல் 2024: குஜராத் டைடன்ஸ் அணியிலிருந்து வெளியேறுகிறாரா ஹர்திக் பாண்டியா?
Women's Premier League

மும்பை இண்டியன்ஸ்:

அணியில் உள்ளழர்கள்: அமன்ஜோத் கெளர், அமெலியா கெர், சோலி டிரையான், ஹர்மன்ப்ரீத் கெளர், ஹேலே மாத்யூஸ், ஹுமாரியா காஸி, இஸபெல் வோங், ஜின்டிமனி கலீதா, நாடாலி ஸ்கிவர், பூஜா வஸ்த்ராகர், பிரியங்கா பாலா, சைகா இஷாக், யாஷ்டிகா பாடீயா.

விடுவிக்கப்பட்டவர்கள்: தாரா குஜ்ஜார், ஹீதர் கிரஹாம், நீலம் பிஷ்ட், சோனம் யாதவ்.

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு:

அணியில் உள்ளவர்கள்: ஆஷா ஷோபனா, திஷா கஸட்,எல்லிஸ் பெர்ரி, ஹீதர் நைட், இந்திராணி ராய், கனிகா ஹுஜா, ரேணுகா சிங், ரிச்சா கோஷ், ஸ்ரேயங்கா பாடீல், ஸ்மிருதி மந்தனா, ஸோஃபி டிவைன்.

விடுவிக்கப்பட்டவர்கள்: டானே வான் நீகெர்க், எரின் பர்ன்ஸ், கோமல் ஜன்ஸாத், மேகன் ஷுட், பூனம் கெம்னர், ப்ரீத்தி போஸ், சஹானா பவார்.

உ.பி. வாரியர்ஸ்:

அணியில் உள்ளவர்கள்: அலிஸா ஹீலே, அஞ்சலி சர்வானி, தீப்தி சர்மா, கிரேஸ் ஹாரிஸ், கிரன் நவ்கிரே, லாரன் பெல், லட்சுமி யாதவ், பர்ஷாவி சோப்ரா, ராஜேஸ்வரி கெய்க்வேட், யஷாஷ்ஸ்ரீ, ஸ்வேதா ஷெர்வாட், ஸோஃபி எக்லிஸ்டோன், தஹிலா மெக்ராத்.

விடுவிக்கப்பட்டவர்கள்: தேவிகா வித்யா, ஷப்னம் இஸ்மாயில், ஷிவாலி ஷிண்டே, சிம்ரன் ஷேக்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com