"எனக்கு ஏன் கேல் ரத்னா விருது இல்லை?".. வீரேந்தர் சிங் குமுறல்!

 Virender Singh.
Virender Singh.

காது கேளாதோர் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரேந்தர் சிங், எனக்கு ஏன் கேல் ரத்னா விருது இல்லை? காதுகேளாதோர் விளாயாட்டு வீர்ராக இருப்பது குற்றமா? என்று கேட்டு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்த இந்திய வீர்ர்களுக்கு தில்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, உயரிய விருதான கேல் ரத்னா, அர்ஜுனா உள்ளிட்ட விருதுகளை வழங்கி கெளரவித்தார்.

2021 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதுபெற்ற வீரேந்தர் சிங், சமூக வலைத்தளங்கள் மூலம் பிரதமர் மோடி, விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகுர் ஆகியோரை சாடினார். தமக்கு நாட்டின் உயரிய விருதான கேல் ரத்னா விருது வழங்கப்படாதது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தினார். காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த பிரிவில் வீரேந்தர் மூன்று முறை தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இது தவிர அர்ஜுனா விருதையும் பெற்றவர்.

விளையாட்டுத்துறையில் கடந்த காலங்களில் சாதனை புரிந்த்தற்காக ஹரியானா மாநில அரசு ரூ.8 கோடி பரிசு அறிவித்திருந்த்து. ஆனால், இன்றுவரை அதைத் தரவில்லை என்று வீரேந்தர் சிங் குற்றஞ்சாட்டினார்.

மாநிலத்தில் உள்ள காதுகேளாத மல்யுத்த வீர்ர்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும்படி ஹரியானா பவன் முன் 2021 இல் முற்றுகைப் போராட்டம் நடத்தியவர் வீரேந்தர் சிங். தனது சகோதரருக்கு ரூ.6 கோடி ரொக்கப்பரிசு தருவதாக 2017 இல் ஹரியானா அரசு உறுதியளித்திருந்ததாக வீரேந்தர் சிங்கின் சகோதரர் கூறினார்.

வீரேந்தர் சிங் 2005, 2013 மற்றும் 2017 இல் நடைபெற்ற காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர். 2021 இல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றார். மேலும் பல்வேறு மல்யுத்த போட்டிகளிலும் தங்கம் வென்றுள்ளார்.

இதையும் படியுங்கள்:
2023 அதிகம் விற்பனையான இருசக்கர வாகனம் எது தெரியுமா?
 Virender Singh.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷனுக்கு நெருங்கிய சகாவான சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வினீஷ் போகத், பஜ்ரங் புனியா மற்றும் சாக்ஷி மாலிக் எதிர்ப்பு தெரிவித்தபோது அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் வீரேந்தர் சிங்.

பஜ்ரங் புனியா தனக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பி அளித்த போது, அவருக்கு ஆதரவாக தாமும் பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்கப்போவதாக வீரேந்தர் கூறியிருந்தார்.

இதையடுத்து மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவரை இடைநீக்கம் செய்து, அந்த அமைப்பை கண்காணிக்க ஒரு இடைக்காலக் குழுவை மத்திய அரசு நியமித்தது குறிப்பிடத்தக்கது.

2023 ஆம் ஆண்டுக்கான கேல் ரத்னா விருது பேட்மின்டன் வீர்ர்களான சாத்விக்ராஜ் ரங்கி ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஜோடி ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com