Best selling bike of 2023.
Best selling bike of 2023.

2023 அதிகம் விற்பனையான இருசக்கர வாகனம் எது தெரியுமா?

Published on

2023 ஆம் ஆண்டு ஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக் அதிக விற்பனையாகி முதலிடம் பிடித்துள்ளது.

முன்பு வீட்டிற்கு ஒரு இருசக்கர மோட்டார் வாகனம் என்று இருந்த நிலை போய், தற்போது வீட்டிற்கு 2, 3 இருசக்கர மோட்டார் வாகனங்கள் வந்துவிட்டன. இந்த அளவிற்கு இரு சக்கர மோட்டார் வாகனங்களினுடைய தேவை அதிகரித்திருக்கிறது.

இந்த நிலையில் இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு அதிகம் விற்பனையான இருசக்கர மோட்டார் வாகன மாடல்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக் அதனுடைய கிளாசிக்கான தோற்றம், மைலேஜ், செயல் திறன் ஆகிய தனி சிறப்பின் காரணமாக அதிகம் விற்பனையாகும் பைக் வருசையில் முன்னணியில் உள்ளது.

ஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக் அறிமுகம் செய்யப்பட்ட காலம் முதல் தற்போது வரை தொடர்ந்து அதிக விற்பனையாகும் பைக் மாடலாகவும் உள்ளது. இதன் தொடர்ச்சியாக நடப்பாண்டில் 2.5 லட்சம் பைக்குகளுக்கு மேல் விற்பனையாகி உள்ளது. அதேசமயம் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக் 2022-ம் ஆண்டி விற்பனையானதை விட 5.5 சதவீதம் நடப்பாண்டில் விற்பனை குறைந்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக ஹோண்டா நிறுவனத்தின் புதிய பைக்!
Best selling bike of 2023.

இரண்டாவது இடத்தில் ஹோண்டா சைன் மாடல் பைக்குகள் உள்ளன. இவை இரண்டு லட்சத்திற்கும் அதிகமாக விற்பனையாகி உள்ளது. மூன்றாவது இடத்தில் பஜாஜ் பல்சர் பைக் உள்ளது. இந்த வகை பைக்குகள் 1.3 லட்சத்திற்கு மேல் விற்பனையாகி இருக்கின்றது.

logo
Kalki Online
kalkionline.com