சமூக வலைதளங்களில் வரும் கருத்துகளை வைத்து அணியின் வீரர்களை தேர்வு செய்ய முடியாது – கவுதம் கம்பீர்!

Gautam Gambhir With K.L.Rahul
Gautam Gambhir With K.L.Rahul
Published on

இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெறும் போட்டி குறித்து கவுதம் கம்பீர் பேசியிருக்கிறார். அதாவது சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவிப்பார்கள், அதையெல்லாம் கேட்டு அணி வீரர்களை தேர்வு செய்ய முடியாது என்று பேசியிருக்கிறார்.

இந்தியா நியூசிலாந்து இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சொதப்பியதால், இரண்டாவது இன்னிங்ஸில் எவ்வளவு முடிந்தும் வெற்றிபெற முடியவில்லை. இதனால், நியூசிலாந்து அணி 3 போட்டிகளில் ஒரு போட்டியில் வென்று முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இரண்டாவது போட்டி வரும் 24ம் தேதி ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டிக்கான அணி வீரர்களை இந்திய அணி வெளியிட்டுள்ளது. இந்த அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். அண்மையில் நடந்த ரஞ்சி ட்ராபியில் டெல்லி அணிக்கு எதிராக சதம் அடித்தார். இதனையடுத்துதான் இவர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் ஏற்கனவே அஸ்வின், ஜடேஜா, குல்தீப், அக்‌ஷர் படேல் என 4 சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ள நிலையில், தற்போது கூடுதலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் இணைகிறார்.

மேலும் கில் காயத்திலிருந்து திரும்பி இருப்பதால், சர்பராஸ் கான் அணியில் நீடிப்பாரா அல்லது கே.எல்.ராகுல் விலகுவாரா என்ற கேள்விகள் எழுந்தன. இந்தநிலையில்தான் பலரும் சர்ஃபராஸ் கானுக்கு அணியில் வாய்ப்பு தர வேண்டும் என்றும், ராகுலை அணியை விட்டு நீக்க வேண்டும் என்றும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் வல்லுநர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்துதான் கவுதம் கம்பீர் பேசியிருக்கிறார். "சமூக வலைதளத்தில் கூறப்படும் கருத்துக்களை வைத்து இந்திய அணியின் பிளேயிங் லெவனை தீர்மானிக்க முடியாது சமூக வலைதள கருத்துக்களையும் விமர்சகர்களின் விமர்சனங்களையும் அடிப்படையாக வைத்து பிளேயிங் லெவனை தீர்மானிக்க முடியாது.

இதையும் படியுங்கள்:
ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரரால் மீண்டும் விளையாட முடியுமா?
Gautam Gambhir With K.L.Rahul

அணி நிர்வாகம் என்ன நினைக்கிறது? கேப்டன், பயிற்சியாளர் என நினைக்கிறார் என்பது தான் மிகவும் முக்கியம். இங்கு அனைவருமே எப்படி விளையாடுகிறார்கள் என்று கவனிக்கப்படுகிறார்கள். சர்வதேச கிரிக்கெட் விளையாடும் அனைத்து வீரர்களின் ஆட்டத்திறனும் ரசிகர்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. என்னை பொறுத்தவரை கே.எல். ராகுல் நன்றாக தான் பேட்டிங் செய்து வருகிறார்." என்று பேசினார்.

மேலும் "நியூசிலாந்து தொடர் முடிவடைந்த உடன் ஆஸ்திரேலியா தொடருக்கு  10 நாட்கள் ஓய்வு இருக்கும். எங்களுடைய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு போதுமான ஓய்வு இருக்கிறது." என்று பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com