BJP-யில் இணையும் யுவராஜ் சிங்.. தேர்தலில் போட்டியிடப் போகிறாரா?

Yuvraj Singh joins BJP
Yuvraj Singh joins BJPImge credit: News9live

முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பாஜகாவில் இணையவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. யுவராஜ் சிங் மத்திய அமைச்சரை சந்தித்து பேசியது ரசிகர்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

சமீபக்காலமாக விளையாட்டு வீரர்களும் சினிமா துறையில் இருக்கும் பிரபலங்களும் பாஜகாவில் இணைந்து வருகின்றனர். அதுவும் விளையாட்டு வீரர்கள் ஓய்வுக்குப் பின்னர் அரசியலில் வலம் வர மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே கவுதம் கம்பீர் பாஜகாவில் இணைந்து டெல்லி கிழக்கு தொகுதி போட்டியில் வெற்றிபெற்று எம்பியாக செயல்பட்டு வருகிறார். அதேபோல் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் ஆம் ஆத்மி எம்பியாக செயல்பட்டு வருகிறார். இதனையடுத்து இப்போது முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கும் பாஜகாவில் இணைந்து அரசியலில் ஈடுப்பட உள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

யுவராஜ் சிங் இந்திய அணிக்காக 17 ஆண்டுகள் விளையாடினார். இந்த ஆண்டுகளில் இவர் இந்திய அணிக்காக 40 டெஸ்ட் தொடர்கள், 304 ஒருநாள் போட்டிகள், 58 டி20 போட்டிகளில் விளையாடி, 12 ஆயிரத்திற்கும் அதிக ரன்களை எடுத்துள்ளார்.

மேலும் 2007ம் ஆண்டு மற்றும் 2011ம் ஆண்டின் உலககோப்பை போட்டிகளில், தோனி தலைமையிலான இந்திய அணி வெற்றிபெறுவதற்கு, முக்கிய காரணமாக இருந்தவர் யுவராஜ். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங் சில காலம் எந்த தொடர்களிலும் விளையாடவில்லை. இதனையடுத்து 2019ம் ஆண்டின் ஐபிஎல் தொடருக்குப்பின் யுவராஜ் தனது ஓய்வைத் தெரிவித்தார்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் யுவராஜ் சிங் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு என்ன காரணம் என்பது இன்னும் தெரியவரவில்லை. ஆயினும், யுவராஜ் சிங் நாடாளுமன்ற தேர்தலுக்குப் முன்னர் பாஜகாவில் இணையவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தின் குர்டாஸ்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது. தற்போது அந்த தொகுதியின் எம்பியாக இருப்பது பாஜகாவை சேர்ந்த நடிகர் சன்னி டியோல்.

இதையும் படியுங்கள்:
வரலாற்று சாதனை படைத்து உலகின் நம்பர் 1 பவுலரான பும்ரா!
Yuvraj Singh joins BJP

இந்த செய்தி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் யுவராஜ் சிங்கிற்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்று பலரும் கூறுகின்றனர். அதேபோல் யுவராஜின் தந்தை யோக்யராஜ் அரசியலில் ஈடுப்பட ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com