பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் திடீர் ராஜிநாமா!

Zaka Ashraf.
Zaka Ashraf.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகக் குழு தலைவர் ஜகா அஷ்ரப், தமது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். அஷ்ரப் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி முதல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழுவில் இடம்பெற்றிருந்தார். நஜம் சேத்தி, பதவி விலகியதை அடுத்து அஷ்ரப், பி.சி.பி. நிர்வாகக் குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.

லாகூரில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடைபெற்ற கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழு கூட்டத்தில் ஜகா அஷ்ரப், தமது ராஜிநாமா கடிதத்தை புரவலரும் பாகிஸ்தான் இடைக்கால  பிரதமருமான அன்வர் உல் ஹக்கிடம் அளித்த்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தம்மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாக பி.சி.பி. புரவலரும், இடைக்கால பிரதமருமான அன்வர் உல் ஹக்குக்கு எழுதிய கடிதத்தில் அஷ்ரப் குறிப்பிட்டுள்ளார்.

அவரது பதவிக்காலத்தில் பி.சி.பி.யின் செயல்பாடுகளுக்காக அஷ்ரப் பல விமர்சனங்களை எதிர்கொண்டார். உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியின் மோசமான ஆட்டத்துக்கு கேப்டன் பாபர் அஸம் மற்றும் தலைமை தேர்வாளர் இன்ஸமாம் உல் ஹக் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டி அவர் வெளியிட்ட அறிக்கை சர்ச்சைக்கிடமானது. மேலும் பாபர் அஸம் மற்றும் பிசிபி உயர் அதிகாரிகளிடையே நடந்த வாட்ஸ் ஆப் உரையாடல் கசிந்து அவை டி.வி.யில் ஒளிபரப்பானதற்கு அஷ்ரப்தான் காரணம் என குற்றஞ்சாட்டு எழுந்தது.

பாரபட்சமாக செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து தலைமை தேர்வாளர் பதவியை இன்ஸமாம் உல் ஹக் ராஜிநாமாச் செய்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த பி.சி.பி. ஒரு குழுவை ஏற்படுத்தியிருந்தது. அஷ்ரப்புக்கு முதலில் மூன்றுமாதம் பதவி நீட்டிப்பும் பின்னர் மேலும் நான்கு மாத கால பதவி நீட்டிப்பும் வழங்கப்பட்டது. எனினும் உலக கோப்பை போட்டிக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு தேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டது.

இதையும் படியுங்கள்:
ருசியில் Top Notch இந்த பலாக்காய் பொரியல்! 
Zaka Ashraf.

உலக கோப்பை தோல்வியை அடுத்து பாபர் அஸம் பாகிஸ்தான் கேப்டன் பதவியை ராஜிநாமாச் செய்தார். அவருக்கு பதிலாக டெஸ்ட் போட்டிகளுக்கு ஷான் மசூத் கேப்டனாகவும், டி20 போட்டிகளுக்கு ஷாஹீன் அப்ரிடி கேப்டனாகவும் நியமிக்கப்பட்டன.

அஷ்ரப் தலைமையிலான நிர்வாக குழு அப்போதைய இயக்குநர் மிக்கி ஆர்தர் தலைமையிலான பயிற்சி குழுவை நீக்கிவிட்டு அவர்களை தேசிய கிரிக்கெட் அகாதெமிக்கு மாற்றியது. எனினும் அவர்கள் புதிய பதவியை ஏற்காமல் ராஜிநாமாச் செய்துவிட்டனர்.

இதையடுத்து முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் குழு இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாகாப் ரியாஸ் தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தலைமையின் கீழ் பாகிஸ்தான் அணி எந்த போட்டியிலும் ஜெயிக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தொடரை 3-0 என இழந்தது. ஷாஹீன் அப்ரிடி தலைமையிலான டி20 அணியும் நியூஸிலாந்துக்கு எதிரான 5 டி20 போட்டிகளில் நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருபோட்டி நடைபெற வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com