கிறிஸ்தவ மதத்தை பரப்ப முயற்சித்த தந்தை… கிரிக்கெட் வீராங்கனைக்கு வந்த சிக்கல்!

Jemimah with her father
Jemimah with her father
Published on

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீராங்கனையான ஜெமிமாவின் தந்தை கிறிஸ்தவ மதத்தை பரப்ப முயற்சித்ததாக எழுந்த புகாரின் பேரில், ஜெமிமாவின் கிரிக்கெட் கெரியருக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமாவுக்கு 24 வயதாகிறது. இவர் இந்திய  அணிக்காக 3 சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலும், 30 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும், 104 சர்வதேச டி20  போட்டிகளிலும் விளையாடியிருக்கிறார். இந்திய அணிக்காக சர்வதேச அளவில் 3000 ரன்களை அடித்திருக்கிறார். இவரே இந்திய அணியின் அடுத்த கேப்டனாக வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. கர் ஜிம்கானா கிரிக்கெட் சங்கத்தில் கௌரவ உறுப்பினராக இருந்து வருகிறார் ஜெமிமா.

இந்த சங்கத்தில்தான் ஜெமிமாவின் தந்தை கிறிஸ்தவ மதத்தை பரப்ப முயற்சித்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து விசாரணை செய்யப்பட்டது. இந்த விசாரணையில் அவர் கடந்த ஒரு ஆண்டாக அங்கு மத போதனைகளை நடத்தியிருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் கர்த்தர் உங்களை காப்பாற்றுவார்! கர்த்தர் பக்கம் வாருங்கள் என்ற தலைப்புகளில் ஜெப கூட்டங்களும் நடந்து இருக்கின்றன. மேலும் கிறிஸ்தவ பாடல்கள், இசை நிகழ்ச்சி போன்றவற்றையும் நடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. சங்க விதிகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஜெமிமாவின் உறுப்பினர் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள்:
திருமண பந்தத்தின் உன்னதம் உணர்த்திய புகழ் பெற்ற சினிமா இயக்குநர் மனைவி!
Jemimah with her father

இதுகுறித்து கர் ஜிம்கானா சங்கத்தின் தலைவர் விவேக் தேவனானி பேசுகையில், “ஜெமிமாவுக்கு மூன்று ஆண்டுக்கால கௌரவ உறுப்பினர் அங்கீகாரம் வழங்கினோம். ஆனால், இதனை ஜெமிமாவின் தந்தை தவறாக பயன்படுத்தியுள்ளார். சங்கத்திற்கு சொந்தமான கட்டடத்தை ஒரு மதத்தை பரப்புவதற்காக பயன்படுத்தியிருக்கிறார். இதனை எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இது மிகப்பெரிய தவறு.

கிறிஸ்தவ மதத்தை பரப்ப 35 நிகழ்ச்சிகளை அவர் நடத்தி இருக்கிறார். எங்களின் சங்க விதிகளின்படி மத ரீதியிலான நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி இல்லை. இதனால் ஜெமிமாவுக்கு வழங்கப்பட்ட உறுப்பினர் அந்தஸ்தை ரத்து செய்து இருக்கிறோம்.” என்று பேசியிருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com