தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.
Updated on:
Copied
Follow Us
-ஜிக்கன்னு.
டென்மார்க்கில் நடைபெற்ற டேனிஷ் ஓபன் சர்வதேச நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் பங்கேற்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.
நடிகர் மாதவன் மகன் வேதாந்த் சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில் 7 பதக்கங்களை வென்று ஆச்சரியப்படுத்தினார்.
மேலும் வேதாந்த் 2026-ல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருகிறார். தனது மகன் மற்றும் மனைவியுடன் துபாய் நாட்டில் தங்கியுள்ள மாதவன் அங்கு தனது மகனுக்கு சிறந்த பயிற்சியாளரை கொண்டு நீச்சல் பயிற்சி அளித்து வருகிறார்.
இந்நிலையில் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச நீச்சல் போட்டியில் வேதாந்த் பங்கேற்றுள்ளார். இதில் ஆடவருக்கான 800 மீட்டர் பிரிவில் இந்திய வீரர் வேதாந்த், பந்தய தூரத்தை 8:17.28 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.
இது வேதாந்த் வெல்லும 2-வது பதக்கம் ஆகும். கடந்த சனிக்கிழமை நடந்த 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் வேதாந்த் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியிருந்தார்.
வேதாந்த், தங்கப் பதக்கம் வென்ற பரிசளிப்பு வீடியோவை மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
'' வேதாந்துக்கு தங்கப் பதக்கம், கிடைத்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்துடனும், கடவுளின் மிகப் பெரிய ஆசீர்வாதத்துடனும் வேதாந்தின் வெற்றி தொடர்கிறது. பயிற்சியாளர் பிரதீப்குமார் மற்றும் இந்திய நீச்சல் கூட்டமைப்பு அளித்த ஆதரவுக்கு நன்றிகள்"