ஆப்கானிஸ்தான் வீரர் நவீனுக்கு ஆதரவுகரம் நீட்டிய கோலி...

Naveen and Virat
Naveen and Virat

சிசி உலககோப்பையின் 9 வது போட்டி நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடைப்பெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது.

இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா 84 பந்துகளில் 16 பவுண்டரிஸ் 5 சிக்ஸர்கள் என மொத்தம் 131 ரன்கள் பெற்று ஆட்ட நாயகன் ஆனார். இந்தியா களமிறங்கும் போட்டி என்றாலே இந்திய ரசிகர்கள் உற்சாகமும் எதிர்ப்பார்ப்பும் சற்று கூடுதலாகவே இருக்கும். அப்படி நேற்று நடந்த ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையே நடந்த போட்டியில் கிரிக்கெட் ரசிகர்களை நெகிழ்ச்சிப்படுத்திய மற்றும் முகம் சுளிக்க வைத்த சில நிகழ்வுகளைப் பார்ப்போம்.

கெயிலேவை பின்னுக்கு தள்ளிய ரோஹித் ஷர்மா!!

கடந்த ஐசிசி உலக கோப்பையின் ஐந்தாவது போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் ஷர்மாவின் டக் அவுட்டால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் நேற்று ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் ஐந்து சிக்ஸர்களுடன் 131 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். ஒரு ஆண்டில் 40 சிக்ஸர்கள் என இதுவரை ஐந்து முறை சாதனைப்படைத்திருக்கிறார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில். அவரைப் பின்னுக்கு தள்ளிய ரோஹித் ஷர்மா ஒரு ஆண்டில் 40 சிக்ஸர்கள் என ஆறு முறை சாதனை நிகழ்த்தி முதல் இடத்தை கைப்பற்றினார். கிறிஸ் கெயில் தனது X தளத்தில் ஷர்மா உடனான 45 ஜெர்ஸி நம்பர் கிரிக்கெட் டி ஷேர்ட் அணிந்த புகைப்படத்தை பதிவு செய்து தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

நண்பன் கோலிக்கு நன்றி தெரிவித்த நவீன்:

கடந்த IPL தொடரில் லக்னோ மற்றும் பெங்களூரு இடையேயான போட்டியின்போது ஆப்கானிஸ்தான் வீரர் நவீனுக்கும் கோலிக்கும் இடையே பெரும் வாக்குவாதம் நடந்தது. அதன்பின்னர் நேற்றைய ஆட்டத்தில் தான் நவீன் உல் ஹக்கும் கோலியும் களத்தில் நேருக்கு நேர் சந்தித்தனர். நவீன் பயிற்சி செய்ய ஆரம்பித்ததிலிருந்தே ரசிகர்களிடமிருந்து ”கோலி” என்ற கோஷம் எழ ஆரம்பித்தது. போட்டியின் இடையே அது மிக மோசமாக மாறி நவீனுக்கு மிக இடையூறாக அமைந்தது. அதை கவனித்த கோலி செய்கையால் ரசிகர்களிடம் கோஷம் செய்யவேண்டாம் என்று கூறினார்.

இதையும் படியுங்கள்:
ஐசிசி உலககோப்பை போட்டி: நவீன் உல் ஹக்கை மறக்காத விராட் ரசிகர்கள்!
Naveen and Virat

அதன்பின்னரே அரங்கம் அமைதியானது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் நவீன் கோலியை கைகுலுக்கி தழுவிக்கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் ரசிகர்களிடையே இருவருக்கும் இடையேயான சர்ச்சைக் கருத்துகளை முடிவுக்கு கொண்டுவந்தது. நவீன் சமூக வளைத்தளங்களில் கோலியுடனான புகைப்படத்தை வெளியிட்டு “ கோலி எனது நன்பர்”,”உங்களுக்கு நன்றி “ போன்றவற்றை பதிவிட்டிருந்தார்.

நேரலையில் நவீனை தாக்கி பேசிய ரவி சாஸ்திரி:

நவீன் மற்றும் கோலி இடையே நேற்று ரசிகர்கள் கோஷம் எழுப்பிய நிலையில் இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்த்திரி ஒரு இந்தி பேட்டியில் பேசினார். அதில் ”இனி நவீன் உல் ஹக் வாழ்நாளில் எங்கே போய் விளையாடினாலும் கோலி ,கோலி என்ற கோஷத்தைதான் கேட்கவேண்டும். போட்டி முடிந்த பின்னர் கோலி அறையைத் தேடி நவீன் செல்லவேண்டும்” என்று மட்டப்படுத்தி பேசினார். ரவி சாஸ்திரியின் இந்த பேச்சு ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

என்னத்தான் இந்திய ரசிகர்கள் நவீனை கோஷமிட்டு தொந்தரவு செய்தாலும் ஒரு கிரிக்கெட் வீரராக அவரை மதித்து மற்றும் கோலியின் சைகைக்கு அத்தனை பேரும் அமைதியானது ரசிகர்களின் விராட் மற்றும் கிரிக்கெட் மீதான அன்பை வெளிக்காட்டியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com