டி 20 போட்டியில் இந்தியா தோல்வி: விராட் கோலி மகளை டிவிட்டரில் விமரிசனம்!

டி 20 போட்டியில் இந்தியா தோல்வி: விராட் கோலி மகளை டிவிட்டரில் விமரிசனம்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

துபாயில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மீண்டும் தோல்வி அடைந்தது. இதையடுத்து அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா இழந்துவிட்டது.

இந்திய அணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து கேப்டன் கோலியை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் கோலி மற்றும் அவர் மனைவி அனுஷ்கா சர்மா, இவர்களின் பெண் குழந்தை வாமிகாவை கண்டபடி திட்டி டிவிட்டரில் ஏராளமான ட்வீட்டுகள் பதிவிடப்பட்டன.

இந்நிலையில் கேபிஸ்தான் ரேடியோ என்ற பக்கத்தில் விராட் கோலியின் மகள் குறித்து கடுமையாக திட்டி செய்தி பதிவிட்டது. அந்த ட்வீட் வைரல் ஆன நிலையில் அந்தப் பக்கம் தற்போது முடக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com