தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே உற்சாக பானம்: மத்திய பிரதேச மதுபானக் கடைகள் அதிரடி!

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே உற்சாக பானம்: மத்திய பிரதேச மதுபானக் கடைகள் அதிரடி!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

மாநிலத்தில் உள்ள ஹண்ட்வா மாவட்டத்தில் மதுக்கடைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஹண்ட்வா மாவட்டத்தில் மதுக்கடைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில அரசு தெரிவித்ததாவது:

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஹண்ட்வா மாவட்டத்தில் மதுக்கடைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அந்த மாவட்டத்தில் மொத்தமுள்ள 74 மதுக்கடைகளிலும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. மது பிரியர்கள் மது பாட்டில் வாங்க வேண்டுமென்றால் இரண்டு தடுப்பூசிகள் போட்டதற்கான ஆதாரத்தை கடை ஊழியரிடம் காண்பிக்க வேண்டும். ஆதாரம் உண்மையாக இருந்தால் மட்டுமே அந்த நபருக்கு மதுபானம் வழங்க வேண்டுமென்று மாவட்ட கலால் அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com