TNPSC குரூப் 3A தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு!

TNPSC  குரூப் 3A தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC குரூப் 3A தேர்வு 28.01.2023ஆம் தேதி 09.30லிருந்து 12.30வரை நடைபெறவுள்ளது. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நியமனங்களுக்கான இடஒதுக்கீடு விதிக்கு உட்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்புக்கான தகுதியான விண்ணப்பதாரர்களின் தற்காலிக பட்டியல் ஆணையத்தின் இணையதளத்தில் அறிவிக்கப்படும். தேர்வுக்கு காத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் அனுமதி அட்டையை பதிவிறக்கம் செய்து தேர்வில் கலந்து கொள்ளலாம்.

இத்தேர்வுக்கு காத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpscexams.in / www.tnpsc.gov.in இல் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.

TNPSC குரூப் 3 ஹால் டிக்கெட் 2023 பதிவிறக்கம் செய்வது எப்படி?

1.விண்ணப்பதாரர்கள் https://tnpsc.gov.in/ என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.

2.முகப்பு பக்கத்தில் உள்ள ஹால் டிக்கெட் டவுன்லோட் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

3.“TNPSC குரூப் 3 ஹால் டிக்கெட் 2023” இணைப்பைச் சரிபார்க்கவும்.

4.ஹால் டிக்கெட் உள்நுழைவில் தேவையான விவரங்களை உள்ளிடவும்.

5.தேர்வுக்கு பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

logo
Kalki Online
kalkionline.com