0,00 INR

No products in the cart.

 சூரரைப் போற்று இந்தி ரீமேக்: பாலிவுட்டில் எண்டர் ஆகிறார் நடிகர் சூர்யா!

நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், சூரரைப் போற்று படத்தை இந்தியில் ரீமேக் ஆக தயாரிக்கிற்து. இதன்மூலம் பாலிவுட்டில் தயாரிப்பாளராக முதன்முதலாக அடியெடுத்து வைக்கிறார் நடிகர் சூர்யா. ‘சூரரை போற்று’ படத்தின் இந்தி பதிப்பின் தொடக்க விழா மும்பையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த நிகழ்வில் இப்படத்தின் இந்தி பதிப்பின் நாயகனாக அக்ஷய்குமார், நாயகி ராதிகா மதன், இயக்குநர் சுதா கொங்கரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

‘சூரரை போற்று’ இந்தி ரீமேக் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப் படுவதாக சொல்லப்படுகிற்து. இப்படத்தை ஜோதிகா, சூர்யா ஆகியோருடன் தயாரிப்பாளர் விக்ரம் மல்ஹோத்ராவும் இணைந்து தயாரிக்கிறார். இதில் ராஜசேகர் பாண்டியன் மற்றும் சிக்கா ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இனணகிறார்கள்.

‘சூரரைப் போற்று’ இந்தி ரீமேக் இயக்குநர் சுதா கொங்கரா. ஒளிப்பதிவு நிகேத் பொம்மி. இசையமைப்பு  ஜீ. வி. பிரகாஷ் குமார் மேலும் படத் தொகுப்பு சதீஷ் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை பிந்தியா மற்றும் அரவிந்த் மேற்கொள்கிறார்கள்.

‘சூரரைப்போற்று’ இந்தி ரீமேக் தொடக்கவிழாவில் கலந்துக் கொள்வதற்காக, கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் படபிடிப்பிலிருந்து சூர்யா மும்பைக்குச் சென்றார் என்பது குரிப்பிடத்தக்கது.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

கல்யாணத்தில் கலக்கல் டான்ஸ்; நிக்கி கல்ராணி- ஆதி அசத்தல்! 

0
தமிழில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ‘டார்லிங்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி.அதையடுத்து ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘மொட்டசிவா கெட்டசிவா’ மற்றும் அண்மையில் வெளிவந்த ‘ராஜவம்சம்’...

மறுமணம் மகிழ்ச்சி அளிக்கிறது: இசையமைப்பாளர் டி.இமான்!

0
பிரபல இசையமைப்பாளர் டி. இமான் தனது மறுமணத்துக்குப் பின் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இமான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டதாவது; சினிமாவில் விளம்பர வடிவமைப்பாளராக பணியாற்றி, மறைந்த உபால்டுவின் மகள் அமலிக்கும் எனக்கும் கடந்த...

புழு; திரைப்பட விமர்சனம்!

1
-தனுஜா ஜெயராமன்  கேரள மம்முட்டி நடிப்பில் புதுமுக பெண்இயக்குனர் ரதீனா இயக்கிய மாறுபட்ட மொழிமாற்ற (தமிழில்) திரைப்படம் புழு.  முதலில் இப்படியான நெகடிவ் கேரக்டரில் நடித்த மம்முட்டியின் துணிவு பாராட்டுக்குரியது. பல்வேறு முகபாவங்களில் பல்வேறு உணர்ச்சிகளை...

டான்; அறியும் தேடல்!

0
-ராகவ் குமார் தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு வந்துள்ள கல்லூரி கதை டான். சிவகார்த்திகேயன் நடிப்பில், சிபி சக்ரவர்த்தி டான் படத்தை இயக்கி உள்ளார். ‘நமது பிள்ளைகளை விருப்பமான துறையை தேர்ந்தெடுக்க விடுங்கள்’ என...

மத்திய அமைச்சர் அமித் ஷா-வுக்கு சவுரவ் கங்குலி கொடுத்த விருந்து!

0
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் கொல்கத்தா சென்றபோது, அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது வீட்டில் விருந்து அளித்தார். மேற்கு வங்கத்திற்கு இரண்டு நாள் பயணமாக...