0,00 INR

No products in the cart.

 ‘பீஸ்ட்’ படத்துக்கு தமிழகத்திலும் தடை?!

நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் உலகெங்கும் வருகிற 13-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், குவைத் அரசு அப்படத்துக்கு அந்நாட்டில் தடை விதித்துள்ளது. அதேபோல், பீஸ்ட் படத்துக்கு தமிழகத்திலும் தடை விதிக்க வேண்டும் என, தமிழ்நாடு முஸ்லிம் லீக் அமைப்பு மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா, தமிழக உள்துறை செயலர் பிரபாகருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டதாவது:

தமிழ் சினிமாவில் மற்ற ஜாதியினரை தவறாக சித்தரித்தால், அதற்கு சமுதாய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவிக்கின்றன. ஆனால் முஸ்லிம்கள் மட்டும் வெடிகுண்டு, துப்பாக்கி கலாசாரத்தில் ஈடுபட்டு, நாட்டின் அமைதிக்கு எதிராக செயல்படுவது போல, திரைப்படங்களில் காட்டப்படுகின்றன.

கடந்த  2015-ம் ஆண்டு வெள்ளத்தின்போதும், கொரோனா பேரிடரின்போதும், முஸ்லிம் அமைப்புகள் செய்த நற்பணிகளை யாரும் மறந்துவிட முடியாது. தற்போது ரம்ஜான் நோன்பு கடைபிடித்து வரும் சூழலில், முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்கும்  ‘பீஸ்ட்’ திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

-இவ்வாறு முஸ்தபா தெரிவித்துள்ளார்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

டான்; அறியும் தேடல்!

0
-ராகவ் குமார் தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு வந்துள்ள கல்லூரி கதை டான். சிவகார்த்திகேயன் நடிப்பில், சிபி சக்ரவர்த்தி டான் படத்தை இயக்கி உள்ளார். ‘நமது பிள்ளைகளை விருப்பமான துறையை தேர்ந்தெடுக்க விடுங்கள்’ என...

மத்திய அமைச்சர் அமித் ஷா-வுக்கு சவுரவ் கங்குலி கொடுத்த விருந்து!

0
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் கொல்கத்தா சென்றபோது, அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது வீட்டில் விருந்து அளித்தார். மேற்கு வங்கத்திற்கு இரண்டு நாள் பயணமாக...

தொண்டர் வீட்டில் குளிக்கும் அமைச்சர்: வைரல் போட்டோ!

0
உத்தரப்பிரதேச மாநில தொழில்துறை அமைச்சர் நந்தகோபால் குப்தா நந்தி, தன் கட்சித் தொண்டர் வீட்டில் குளிக்கும் காட்சி சமூக வலைதளங்களீல் வைரலாகியுள்ளது. உத்திர பிரதேச மாநில அமைச்சர் நந்தகோபால் வெளியூர்களுக்குச் சுற்றுப்பயணம் செல்லும்போது, அங்குள்ள...

சாணிக் காயிதம்: வன்முறை டூ மச்!

0
-லதானந்த். பார்த்துப் பார்த்துச் சலித்துப்போன பழிவாங்கல்தான் கதை. அமேஸான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. நல்லவேளை இது தியேட்டரில் வெளியாகவில்லை; வெளியாகியிருக்கவும் முடியாது – அவ்வளவு வன்முறை. நமக்குத் தீங்கிழைத்தவர்களுக்குச் சட்டம் கொடுக்கும் தண்டனை போதாது;...

8 ஆயிரம் மீட்டருக்கு மேல் 5 சிகரங்கள்; எட்டிப் பிடித்த முதல் இந்தியப்பெண்!

0
மகாராஷ்டிரா மாநிலத்தில் சதாரா பகுதியைச் சேர்ந்த  பிரியங்கா மோஹிதே என்ற இளம்பெண் இமயமலையில் 8 ஆயிரம் மீட்டருக்கு உயரமான 5 சிகரங்களை எட்டிப் பிடித்த முதல் இந்தியப் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.  இதுகுறித்து...