ரூ. 4 லட்சத்தில் ‘பீஸ்ட்’ விஜய் சிலை: செல்பி எடுத்து மகிழும் ரசிகர்கள்! 

ரூ. 4 லட்சத்தில் ‘பீஸ்ட்’ விஜய் சிலை: செல்பி எடுத்து மகிழும் ரசிகர்கள்! 

கோபிச்செட்டிபாளையம் அருகே மொடச்சூரில், தனியார் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில், 'பீஸ்ட்' பட கெட்டப்பில் நடிகர் விஜயின் உருவ சிலையை 4 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கி  காட்சிக்கு வைத்திருக்கிறார், அக்கடையின் உரிமையாளர் பாலா சிங். இச்சிலை அப்பகுதி வழியாக செல்லும் அனைவரின் கவனத்தை ஈர்ப்பதுடன், அச்சிலையுடன் செல்பி எடுத்து மகிழ்கிறார்கள்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜயின் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் உலகெங்கும் இன்று கோலாகலமாக தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் இதை கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் விஜயின் ரசிகர்களை ஈர்ப்பதற்காக கோபி மொடச்சூரில் உள்ள எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவன உரிமையாளர் பாலாசிங், 4 லட்சம் ரூபாய் செலவில், பீஸ்ட் திரைப்படத்தில் நடிகர் விஜயின் கெட்டப்பில் உருவ சிலை ஒன்றை உருவாக்கி, தன் கடைவாசலில் வைத்துள்ளார்.

கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் நடிகர் விஜயின் உருவ சிலை முன்பு நின்று செல்பி எடுத்தும், குழுவாக புகைப்படம் எடுத்தும் செல்கின்றனர்.

இதுகுறித்து பாலா சிங் கூறியதாவது:

''இந்த சிலையை சென்னையில் தயாரித்து கோபிசெட்டிபாளையம் கொண்டு வந்தோம். ஐந்தே முக்கால் அடி உயரம் கொண்ட இந்த சிலை, முழுக்க பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நானும் விஜய் ரசிகர்தான். அந்த வகையில் பீஸ்ட் திரைப்படம் பெரும் வெற்றி பெறவும், வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும் இந்த புதுமையான சிலையை உருவாக்கி வைத்துள்ளேன்.

-இவ்வாறு அக்கடை உரிமையாளர் பாலாசிங் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com