கல்கி ஆன்லைன் - விதிமுறைகள் மற்றும் பொறுப்புத் துறப்பு

Kalkionline - மென்பேனா
விதிமுறைகள் மற்றும் பொறுப்புத் துறப்பு

பகுதி 1: நீங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

  1. ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு கட்டுரை / கதை மட்டுமே அனுப்பலாம்.
  2. கட்டுரை குறைந்தது 350 வார்த்தைகள் அதிகபட்சம் 800 வார்த்தைகள் இருக்க வேண்டும். சிறுகதைகள் 1200 வார்த்தைகள் வரை இருக்கலாம்.
  3. உங்களுடைய பெயர், முகவரி, மின்னஞ்சல், தொலைபேசி எண் அனைத்தையும் கட்டாயம் பகிரவேண்டும்.
  4. தங்கள் படைப்பு பிரசுரம் ஆனால் உங்களுக்கு என்று ஒரு Author Profile உருவாக்கப்படும். இதற்கு தங்களைப் பற்றிய சிறு குறிப்பு (50 வார்த்தைகள்) மற்றும் புகைப்படம் இணைத்து அனுப்பவும்.
  5. அனைத்து உள்ளடக்கங்களும் இரு முறை சரிபார்த்த (எழுத்துப்பிழை, உண்மை சரிபார்ப்பு) பின்புதான் பதிவிட வேண்டும்.
  6. நீங்கள் எங்கிருந்து இந்த உள்ளடக்கத்தின் கருவைத் தேர்ந்தெடுத்தீர்கள், எந்தெந்த வலைத்தளங்களில் இருந்து குறிப்பு எடுத்தீர்கள் என்பதைப் பகிரவேண்டும். ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரக் கட்டுரைகளுக்கு மிக மிக முக்கியம்.
  7. AI உபயோகிப்பது, ஆங்கில உள்ளடக்கத்தை Translate செய்வது, மற்ற செய்தி அல்லது நாளிதழ்களில் இருந்து உள்ளடக்கத்தை நகலெடுத்தது போன்ற செயல்கள் செய்து கண்டுபிடிக்கப்பட்டால் உடனே உங்களது அனைத்து உள்ளடக்கமும் நிறுத்தப்பட்டு நீங்கள் Block செய்யப்படுவீர்கள்.
  8. சொந்தப் படைப்பு என்பதற்கான உறுதிமொழி அவசியம் இணைக்கவும்.
  9. தாங்கள் அனுப்பும் அனைத்து படைப்புகளும் பிரசுரமாகும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை.
  10. பிரசுரத்துக்கான கால அவகாசம் குறித்த உத்திரவாதமும் இல்லை. தகுதியுடைய, சுவாரசியமான கட்டுரைகள் மட்டுமே நமது கல்கி இணையதளத்தில் வெளியிடப்படும்.
  11. இங்கே கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் எந்தப் பகுதிக்குக் கட்டுரையை அனுப்புகிறீர்கள் என்பதை தலைப்பில் குறிப்பிட வேண்டும்.
    (வாழ்வியல், ஆரோக்கியம், வீடு, குடும்பம், உணவு, சமையல், அழகு, ஃபேஷன், பொருளாதாரம், சினிமா, சின்னத்திரை, அறிவியல், தொழில்நுட்பம், ஆன்மீகம், கலை, கலாச்சாரம், சுற்றுசூழல், பயனம், விளையாட்டு)
  12. தங்களுடைய படைப்பின் பிரசுர விவரம் இணையதளத்தை பின்பற்றுவதன் மூலம் தாங்கள் அறியலாம்.
  13. தாங்கள் அனுப்பி வைக்கும் படைப்புகளுக்குச் சன்மானம் அளிக்கப்பட மாட்டாது.
  14. அனைத்து முடிவுகளும் ஆசிரியர் குழுவின் தீர்வுக்கு உட்பட்டது.
  15. சிறுகதைகளாக இருப்பினும் மேற்கண்ட தகவல்கள் பொருந்தும்.

பகுதி 2: வாசகர் படைப்புகளுக்கான பொறுப்புத் துறப்பு

  1. கருத்துகள்: இப்பகுதியில் வெளியாகும் ஒவ்வொரு படைப்புகளில் உள்ள கருத்துகள் அனைத்தும் அவற்றை எழுதியவர்களின் தனிப்பட்ட கருத்துகள். அவை கல்கி ஆன்லைனின் அதிகாரப்பூர்வக் கருத்துகள் அல்ல.
  2. தகவல் துல்லியம்: படைப்புகளில் இடம்பெறும் உண்மைகள், புள்ளிவிவரங்கள், மருத்துவ, சட்ட அல்லது நிதி தொடர்பான தகவல்கள் ஆகியவற்றை கல்கி ஆன்லைன் தனியாகச் சரிபார்ப்பதில்லை. அவற்றின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு கல்கி ஆன்லைன் பொறுப்பேற்காது. தேவைப்படும் இடங்களில் உரிய நிபுணரை அணுகவும்.
  3. சுய படைப்பு & பதிப்புரிமை: சமர்ப்பிக்கப்படும் படைப்பு, அதில் உள்ள புகைப்படங்கள் உட்பட, தம்முடைய சொந்தப் படைப்பு என்பதையும், வேறு எவருடைய பதிப்புரிமையையும் மீறவில்லை என்பதையும் படைப்பாளரே உறுதிசெய்ய வேண்டும். பதிப்புரிமை மீறல் அல்லது அவதூறு தொடர்பான எந்தப் புகாருக்கும் படைப்பாளரே முழுப் பொறுப்பு.
  4. ஆசிரியர் குழுவின் உரிமை: சமர்ப்பிக்கப்படும் எந்தப் படைப்பையும் திருத்த, சுருக்க, தலைப்பை மாற்ற, வெளியிட மறுக்க அல்லது வெளியிட்ட பின் நீக்க ஆசிரியர் குழுவுக்கு முழு உரிமை உண்டு. இது குறித்துத் தனியாகக் காரணம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.
  5. தடை செய்யப்பட்டவை: வெறுப்புப் பேச்சு, அவதூறு, ஆபாசம், தனிநபர் தாக்குதல், சாதி/மத/இன ரீதியான இழிவு, நகல்கள் அல்லது நகலாக்குதல், தவறான தகவல் அல்லது விளம்பர நோக்கம் கொண்ட படைப்புகள் ஏற்கப்படாது.
  6. வெளியீட்டு உரிமை: படைப்பைச் சமர்ப்பிப்பதன் மூலம், அதை கல்கி ஆன்லைன் இணையதளம், செயலி மற்றும் சமூக ஊடகத் தளங்களில் வெளியிட படைப்பாளர் அனுமதி அளிக்கிறார். படைப்பின் உரிமை படைப்பாளரிடமே இருக்கும்.
  7. புகார்கள்: இப்பகுதியில் வெளியான எந்தப் படைப்பு குறித்தும் ஆட்சேபனை இருந்தால் [onlines@kalkiweekly.com] என்ற முகவரிக்குத் தெரிவிக்கலாம். ஆசிரியர் குழு அதைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும்.

மேற்கண்ட விதிமுறைகள் மற்றும் பொறுப்புத் துறப்பை முழுமையாகப் படித்துப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்ட பிறகு, உங்கள் படைப்பைச் சமர்ப்பிக்கலாம்.

விதிமுறைகளை ஏற்றுக்கொள்கிறேன் - படைப்பைச் சமர்ப்பிக்கவும்