கன்னி - 28-12-2022

கன்னி - 28-12-2022
Perungulam Ramakrishnan Josiyar

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

இன்று தந்தை, தந்தை வழி உறவினர்கள், பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரலாம்.  நண்பர்களிடத்தில் மனக்கிலேசம் ஏற்படலாம்.  சுபச்செலவுகள் நிகழும். எதிர்காலத்திற்குத் தேவையான முறையான சேமிப்புகளுக்குண்டான ஏற்பாடுகளை செய்வீர்கள். எதிரிகளின் இன்னல்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும். மனவருத்தத்துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து சேருவார்கள்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன்  உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம்விட்டு பேசுவது நல்லது. பிள்ளைகள்  நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

ஹஸ்தம்:இன்று அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது.  எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும்.  தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும் சுமாராக வரும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும்.

சித்திரை 1, 2 பாதங்கள்:இன்று எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். வீண் செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4, 6

logo
Kalki Online
kalkionline.com