கன்னி - 29-12-2022

கன்னி - 29-12-2022
Updated on

இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும்.  கணவன், மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். நண்பர்களால் தொந்தரவுகள் ஏற்படலாம். ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:இன்று குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும்.  அதே நேரத்தில் அவர்களால் செலவும் வரும்.

ஹஸ்தம்:இன்று  கடன் பிரச்சனை குறையும். வீண் அலைச்சல் மனோபயம் குறையும். குடும்பத்தில் வாக்குவாதம் ஏற்படும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது  காரிய வெற்றிக்கு உதவும்.

சித்திரை 1, 2 பாதங்கள்:இன்று குடும்ப விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே  மனம்விட்டு பேசுவது கருத்து வேற்றுமை  ஏற்படாமல் தடுக்கும். பிள்ளைகளிடம் கோபமாக பேசாமல் அன்பாக பேசுவது நல்லது. வாகன வசதி உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

அதிர்ஷ்டஎண்கள்: 4, 6

logo
Kalki Online
kalkionline.com