கோடையை சமாளிக்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் 10 சூப்பர் உணவுகள்!

10 Ayurvedic Superfoods to Beat Summer
10 Ayurvedic Superfoods to Beat Summerhttps://www.herzindagi.com
Published on

புனிதமான ஆயுர்வேத மருத்துவத்தில், கோடைக்காலத்தில் உடலையும் மனதையும் சமநிலையில் ஆரோக்கியமாகவும் புத்துணர்வோடும் வைத்துப் பராமரிக்க 10 சூப்பர் உணவுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அந்த உணவுகள் எவை என்பதையும் அவற்றிலுள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இளநீர் அருந்தும்போது அதிலுள்ள எலக்ட்ரோலைட்கள் வியர்வை மூலம் வெளியேறும் சத்துக்களை உடலுக்குள் மீண்டும் இட்டு நிரப்ப உதவுகிறது. இதிலுள்ள இயற்கையான இனிப்புச் சுவை மற்றும் மினரல்கள் இதை, 'தாகம் தணிக்கும் அமிர்தம்' என வர்ணிக்கச் செய்கின்றன.

சுமார் தொண்ணூறு சதவிகிதம் நீர்ச்சத்துடைய தர்ப்பூசணி தாகம் தணிப்பதில் முதலிடம் வகிக்கும் பழம் என்றால் அது மிகையல்ல. இதிலுள்ள வைட்டமின் A மற்றும் வைட்டமின் C சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவுகின்றன.

வெள்ளரிக்காயில் உள்ள அதிகளவு நீர்ச்சத்து உடலுக்கு குளிர்ச்சியையும், நீரேற்றத்தையும், புத்துணர்வையும் அளிக்கிறது. இதிலுள்ள சிலிகா என்ற பொருள் சரும ஆரோக்கியத்தையும் செரிமானத்தையும் சிறப்பாக்கக்கூடிய வல்லமை கொண்டது.

புதினா இலைகள் உடலை குளிர்விக்கும் குணம் கொண்டவை. மேலும், சிறப்பான செரிமானத்துக்கு உதவி புரிந்து இரைப்பையை ஆசுவாசப்படுத்தக்கூடியவை. வெயில் நேரத்தில் தயாரிக்கப்படும் பானங்கள் மற்றும் சாலட்களில் புதினா இலைகளை சேர்ப்பது கூடுதல் புத்துணர்வு தரும்.

மணம் நிறைந்த கொத்தமல்லி இலைகள் உடலுக்கு குளிர்ச்சி தரும்; சீரான செரிமானத்துக்கு உதவும்; நச்சுக்களை வெளியேற்ற உதவும்; உணவுக்கு சுவை கூட்டும். பன்முகத்தன்மையுடன், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது கொத்தமல்லி இலை.

‘அழிவில்லாத தாவரம்' என வர்ணிக்கப்படும் ஆலுவேரா சரும ஆரோக்கியத்திற்கும் சீரான செரிமானத்துக்கும் உதவும். இதனுள்ளிருக்கும் ஜெல் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. இது சூரியக் கதிர்களால் சருமத்தில் உண்டாகும் கோளாறுகளை நீக்கும்; உடலை குளிர்ச்சியாகவும் ஊட்டச் சத்து நிறைந்ததாகவும் வைத்துப் பராமரிக்க உதவும்.

குளிர்ச்சி தரும் குணத்தை தன்னுள் கொண்ட தேங்காய் எண்ணெய், பல வழிகளில் உபயோகப்படுத்தத் தகுந்தது. இந்த எண்ணெயை உச்சந்தலை மற்றும் சருமத்தில் தடவி மசாஜ் செய்ய உஷ்ணத்தால் உண்டாகும் உடல் நலக் கோளாறுகள் நீங்கும்; கூந்தல் ஆரோக்கியமும் நீரேற்றமும் பெறும்.

இதையும் படியுங்கள்:
ஒருவர் சும்மா இருந்தால் இப்படியெல்லாம் ஆகுமா?
10 Ayurvedic Superfoods to Beat Summer

பெருஞ்சீரகம் சீரான செரிமானத்துக்கும் உடலை குளிர்ச்சியாய் வைக்கவும் உதவும். உணவுக்குப் பின் இந்த விதைகளை வாயில் போட்டு மெல்வது அல்லது இதில் டீ போட்டு அருந்துவது அசிடிடியைக் குறைக்கும்; செரிமானத்தை மேம்படுத்தும்; மூச்சுக் காற்றை மணமுறச் செய்யும்.

இனிப்புச் சுவையும், உடலுக்குக் குளிர்ச்சி தரும் குணமும் கொண்ட மாம்பழம் ஆயுர்வேதத்தில், 'பழங்களின் ராஜா' எனக் கொண்டாடப்படுகிறது. இதில் நிறைந்துள்ள வைட்டமின் A, C சத்துக்கள் சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், பார்வைத் திறனை மேம்படுத்தவும், நோயெதிர்ப்புச் சக்தியை வலுவடையச் செய்யவும் உதவுகின்றன.

நெய்யானது ஆயுர்வேத மருத்துவத்தில் பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கும் செயலில் முன்னிலையிலிருக்கும் ஒரு பொருளாக மதிக்கப்படுகிறது. இதை உணவுகளுடன் சேர்த்து உண்ணும்போது அதன் குளிர்ச்சி தரும் குணமானது உடலின் திசுக்களுக்கு ஊட்டமளிக்கிறது; சிறப்பான செரிமானத்துக்கு உதவுகிறது. மிதமான அளவில் நெய்யை உண்ணும்போது உடலின் நோயெதிர்ப்புச் சக்தி வலுவடைகிறது.

மேற்கூறிய உணவுகளை நாமும் அடிக்கடி உண்போம்; நலம் பல பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com