ஒவ்வொரு மனிதனுக்கும் தூக்கம் மிகவும் இன்றியமையாதது. ஆதலால்தான் தினமும் குறைந்தது 8 மணி நேர தூக்கத்தை மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். எட்டு மணி நேர தூக்கம் நம்மை புத்துணர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது.
8 மணி நேர தூக்கத்தால் ஏற்படும் நன்மைகள்:
1. ஆரோக்கியமாக இருக்க: தினமும் குறைந்தது 8 மணி நேரம் தூங்குவது உடலை ஆரோக்கியமாக வைக்கும். ஏனெனில், நாள் முழுவதும் நாம் செய்யும் பல செயல்களால் உடலும் மூளையும் சோர்வாக இருக்கும். எனவே, உடலும் மூளையும் போதுமான அளவு ஓய்வெடுக்கும்போது, அடுத்த நாளே அவை சுறுசுறுப்பாக இருக்கும்.
2. மூளைக்கு நல்லது: நாள் முழுவதும் உழைத்து சோர்வாக இருக்கும் மூளை ஓய்வுக்காக ஏங்குகிறது. அதனால் தூக்கம் மூளையை ரிலாக்ஸ் செய்யும்.
3. ஆயுள் அதிகரிக்கும்: ஆரோக்கியமான வாழ்க்கை வாழ தினமும் போதுமான அளவு தூங்கினால் ஆயுட்காலம் அதிகரிக்கும்.
4. வீக்கத்தைக் குறைக்கிறது: இதய நோய், பக்கவாதம், நீரிழிவு மற்றும் பிற உடல்நலப் பிரச்னைகளுடன் வீக்கம் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, சில ஆராய்ச்சிகளின்படி, மோசமாக தூங்குபவர்களுக்கு உயர் இரத்த அழுத்த அளவுகள் மற்றும் அழற்சி புரதங்கள் உள்ளன.
5. ஆரோக்கியமான எடை அதிகரிப்பு: லெப்டின் ஒரு ஹார்மோன் ஆகும். இது உங்களை முழுதாக உணர வைக்கிறது. தூக்கம் சரியில்லாதபோது இந்த ஹார்மோன் குறையும். இதன் விளைவாக, நீங்கள் எப்போதும் பசியுடன் இருப்பதாக உணர்வதால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சரியான தூக்கத்தை பராமரிக்கும் போது ஆரோக்கியமான எடை அதிகரிப்பிற்கு வழி வகுக்கிறது.
6. மன அழுத்தத்தை குறைக்கிறது: ஒரு நல்ல இரவு தூக்கம் மன அழுத்தத்தை குறைக்கிறது. எனவே, தினமும் குறைந்தது 8 மணி நேரம் போதுமான தூக்கம் பெறுவது முக்கியம்.
7. சிறந்த ஆற்றல்: தூக்கமின்மை ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் அளவை பாதிக்கிறது. எனவே, ஆற்றலைப் பெற போதுமான தூக்கம் அவசியம்.
8. புற்றுநோயைத் தடுக்கிறது: 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் உட்பட புற்றுநோயின் அபாயம் 62 சதவிகிதம் அதிகமாக இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
9. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: இரவில் 8 மணி நேரம் நன்றாகத் தூங்குபவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கும். அதன் மூலம், பொதுவான நோய்களை எதிர்த்துப் போராடும் சக்தி அவர்களுக்கு உண்டு. எனவே, நன்றாகத் தூங்குங்கள்.
10. மன அமைதி: மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உளவியல் பிரச்னைகள் ஏற்படும். இது உடல் நலத்திற்கு நல்லதல்ல. எனவே, தினமும் சரியாக தூங்குவது அவசியம். நல்ல தூக்கம் மன மற்றும் உடல் நிலையை மேம்படுத்துகிறது. இதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
தினமும் இரவில் எட்டு மணி நேரம் தூங்கி உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருப்போம்.