நிறைவான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நல்ல ஆரோக்கியம் அவசியமாகும். இன்று முற்றிலும் மாறிவிட்ட நவீன யுகத்தில், நோய்களைத் தடுப்பதற்கும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை நடைமுறைகளை கடைப்பிடிப்பது முக்கியம். எனவே இந்தப் பதிவின் வாயிலாக ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உதவும் 10 உடல் நலம் சார்ந்த விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
சரியான உணவு மற்றும் கட்டுப்பாடு: உணவுதான் நல்ல ஆரோக்கியத்திற்கு அடித்தளம். எனவே எப்போதும் ஒரே மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளாமல், பல்வேறு பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதம் நிறைந்த உணவுகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பை சேர்த்துக் கொள்ளவும். குறிப்பாக அதிகப்படியான உணவைத் தவிர்த்து ஆரோக்கியமான எடையை பராமரிக்க கட்டுப்பாட்டுடன் இருங்கள்.
நீரேற்றம்: நீங்கள் தினசரி உடலுக்குத் தேவையான தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானதாகும். இந்தியாவின் வெப்பமான காலநிலையால் நீர் இழப்பு விரைவில் ஏற்படலாம். எனவே உங்களுக்கு தாகம் இல்லை என்றாலும் ஒரு தண்ணீர் பாட்டிலை கையில் வைத்துக்கொண்டு அவ்வப்போது தொடர்ந்து தண்ணீர் குடிக்கவும்.
உடல் செயல்பாடு: ஆரோக்கியமாக இருந்து உடல் எடையை பராமரிக்க, வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். நடைப்பயிற்சி, ஜாகிங், சைக்கிளிங், யோகா அல்லது நீங்கள் விரும்பும் எந்த விளையாட்டாவது விளையாடுவது போன்றவற்றை வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்களாவது மிதமான உடற்பயிற்சி தேவை.
மன அழுத்த மேலாண்மை: நாள்பட்ட டிப்ரஷன் உங்கள் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும். எனவே தியானம், மூச்சுப் பயிற்சி, யோகா அல்லது உங்களை மகிழ்விக்கும் பொழுதுபோக்குகளில் ஈடுபடுங்கள். இதன் மூலமாக உங்களது மன அழுத்தம் குறையும் வாய்ப்புள்ளது.
நல்ல தூக்கம்: உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் தினசரி போதுமான தூக்கம் இருக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு நாளும் குறைந்தது 7-9 மணி நேர தரமான தூக்கத்தை உறுதி செய்து கொள்ளவும். இதற்காக ஒரு தூக்க அட்டவணையை உருவாக்கி, தூங்குவதற்கு வசதியான சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள். தூங்குவதற்கு முன்பு மின்சாதனப் பயன்பாட்டை தவிர்ப்பது நல்லது.
வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகள்: எதுவாக இருந்தாலும் வருமுன் காப்பதே சிறந்தது. உங்களுக்கு ஏதாவது உடல் பிரச்சினைகள் உள்ளதா என கண்டறிய, வருடம் ஒரு முறையாவது முழு உடல் பரிசோதனை செய்யத் திட்டமிடுங்கள். குறிப்பாக உங்கள் குடும்ப மருத்துவ வரலாற்றை அறிந்து, அதற்கு ஏற்றவாறு செயல்படுவது நல்லது.
வாய் சுகாதாரம் முக்கியம்: வாய் ஆரோக்கியம் என்பது பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. ஆனால் இது நம் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் குறிப்பிட்டதக்க பங்கு வகிக்கிறது. எனவே ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்கி வாய் சுகாதாரத்தை பராமரிக்கத் தவறாதீர்கள்.
புகையிலை மற்றும் மது வேண்டாம்: புகையிலை மற்றும் அதிகப்படியான மது அருந்துதல் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதிகப்படியான குடிப்பழக்கம் கல்லீரல் பாதிப்பு மற்றும் புற்றுநோய் ஆபத்துக்கள் போன்ற உடல் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். எனவே உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எதையும் தொடாதீர்கள்.
சுகாதாரத்தை கடைபிடிக்கவும்: நோய்கள் பரவாமல் தடுக்க நல்ல சுகாதாரம் நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியம். சோப்பு பயன்படுத்தி அவ்வப்போது உங்கள் கைகளைக் கழுவுங்கள். குறிப்பாக சாப்பிடுவதற்கு முன், கழிவறை பயன்படுத்திய பின் கைகளைக் கட்டாயம் கழுவுங்கள்.
மனநல பராமரிப்பு: உடல் ஆரோக்கியத்தைப் போலவே உங்கள் மன ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஏதேனும் மனம் சார்ந்த சவால்களை எதிர்கொண்டால், நண்பர்கள், குடும்பம் அல்லது தொழில் வல்லுநர்களின் ஆதரவைப் பெறுவது நல்லது. நீங்களாகவே அனைத்தையும் சமாளித்து விடலாம் என நினைக்காதீர்கள்.
இந்த பத்து அத்தியாவசிய சுகாதாரக் குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும்.