இஞ்சி சாறில் இருக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள்!

இஞ்சி சாறு
இஞ்சி சாறுhttps://tamil.webdunia.com

நாம் உண்ணும் உணவு நல்ல முறையில் செரிமானம் ஆவதற்கு உதவும் சில பொருட்களில் இஞ்சியும் ஒன்று. இதை நாம் உப்புமா போன்ற உணவுகளில் நறுக்கிப் போட்டும் பிறவற்றில் பேஸ்ட்டாக அரைத்து சேர்த்தும் உண்கிறோம். ஃபிரஷ் இஞ்சியை மசிய அரைத்து ஒரு மண் பாத்திரத்தில் சேமிக்க, சிறிது நேரத்தில் அதன் மேற்பரப்பில் தெளிவான ஜூஸ் தேங்கி நிற்கும். அதைப் பிரித்தெடுத்து அருந்துவதால் கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. இஞ்சியிலுள்ள ஜின்ஜரால் என்ற பொருள் உமிழ்நீர் மற்றும் பித்த நீரின் சுரப்பை அதிகரிக்கச் செய்து ஜீரணம் நல்ல முறையில் நடைபெற உதவுகிறது.

2. பாரம்பரியமாக குமட்டலையும் வாந்தி வரும் உணர்வையும் தடுத்து நிறுத்த இஞ்சி உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

3. இஞ்சியின் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமானது வீக்கங்களைக் குறைக்க உதவி புரிந்து எலும்புகள் ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ் (Rheumatoid Arthritis) என்னும் நோய்த் தாக்குதலுக்கு உள்ளாவதைத் தடுக்கிறது.

4. இஞ்சியிலுள்ள அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் மற்றும் தீங்கிழைக்கும் ஃபிரிரேடிக்கல்கள் மூலம் செல்கள் சிதைவுறுவதைத் தடுக்கின்றன.

5. இஞ்சி உடலின் உஷ்ண நிலையை சமநிலைப்படுத்தவும், மெட்டபாலிச ரேட்டை அதிகரிக்கச் செய்யவும் உதவி புரிகிறது.

6. இது இன்சுலின் சென்சிடிவிட்டியை அதிகரிக்கச் செய்து குளுகோஸ் மெட்டபாலிசத்தை மேம்படுத்துகிறது.

7. இஞ்சி, ஜீரண மண்டல உறுப்புகளால் கொழுப்புகள் உறிஞ்சப்படுவதைத் தடுத்து அவற்றை கழிவுகளாக உடலிலிருந்து வெளியேறச் செய்கிறது.

இதையும் படியுங்கள்:
உங்கள் குணாதிசயங்களை மற்றவர்க்குக் காட்டும் சின்னச் சின்ன நடவடிக்கைகள்!
இஞ்சி சாறு

8. இஞ்சியின் அனால்ஜெசிக் (Analgesic) குணமானது தசையில் உண்டாகும் வலிகளைக் குறைக்க உதவி புரிகிறது.

9. உடலில் இருந்து வியர்வையை வெளியேற்றும் செயலில் உதவி புரிந்து இயற்கை முறையில் கழிவுகளை வெளியேற்ற துணையாய் நிற்கிறது இஞ்சி.

10. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் மற்றும் வீக்கங்களைக் குறைத்து சரும ஆரோக்கியம் காக்க உதவுகின்றன.

காரத்தன்மையைக் குறைக்க இஞ்சிச் சாற்றுடன் சிறிது வெல்லம் சேர்த்து வாரம் ஒரு முறை அருந்தி வர உடல் ஆரோக்கியம் மேம்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com