இந்தியாவின் ரகசியமான 10 காய்கறிகள்: நீங்கள் ருசித்திருக்கிறீர்களா?

Vegetables
Vegetables
Published on

நாம் நம் தினசரி உட்கொள்ளும் உணவோடு வெண்டைக்காய், புடலங்காய், கத்திரிக்காய், பீன்ஸ், கேரட் என பல வகை காய்கறிகளை எடுத்துக் கொள்கிறோம். இவை தவிர, நாம் பயன்படுத்த மறக்கும், ஊட்டச் சத்துக்கள் நிறைந்த, வேறு பல காய்களும் இங்கு உண்டு. அவற்றில் 10 வகையான காய்கள்/கீரைகள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

1. பலாக்காய்: இது ஒரு பன்முகத் தன்மை கொண்ட வெஜிடபிள். இதை ஒரு சத்து மிக்க அசைவ உணவாகிய மாமிசத்துக்கு மாற்றாக சைவம் மட்டும் சாப்பிடுபவர்கள் தங்கள் உணவுகளில் சேர்த்து சமைத்து உட்கொள்கின்றனர். இதில் வைட்டமின் C, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.

2. வெள்ளைப் பூசணி:  வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிகம் உள்ள காய் இது. சூப் மற்றும் ஸ்டூ  வகைகளில் உபயோகப்படுத்த சிறந்த காய்.

3. லிங்று (Lingru/Fiddle-head Fern): அதிகளவு இரும்புச் சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ள பச்சை இலைக் காய்கறி இது.

4. கோங்குரா / சோர்றேல் இலை (Sorrel leaves): இதில் அதிகளவில் ஊட்டச் சத்துக்கள் மற்றும் அதன் புளிப்பு சுவைக்காக, சில மாநிலங்களில் மக்கள் தங்கள் உணவுடன் சேர்த்து உட்கொள்கின்றனர்.

5. கொலகாசியா (Colacasia) இலை: மற்றொரு ஊட்டச் சத்துக்கள் நிறைந்த இலைக் காய்கறி இது. இந்திய உணவுகளில் சில இடங்களில் உபயோகப்படுத்தப்படுகின்றது.

Vegetables
Vegetables

6. புளி இலைகள் (Tamarind leaves): இதில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிகம் உள்ளன. இவற்றின் புளிப்பு சுவைக்காகவும் மருத்துவ குணங்களுக்காகவும் இதை பரவலாக மக்கள் ஆங்காங்கே பயன்படுத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
இந்திய ரயில்வே மூத்த குடிமக்களுக்கு வழங்கும் 5 சலுகைகள் என்ன தெரியுமா?
Vegetables

7. குல்ஃபா / பர்ஸ்லேன் (Kulfa/Purslane): நல்ல சதைப்  பற்றுள்ள இலைகளைக் கொண்ட கீரை இது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன.

8. அன்னே சொப்பு (Anne Soppu) / Water Spinach: நீர்ப் பசலை எனப்படும் இதன் இலைகளில் நார்ச் சத்து உள்ளிட்ட உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் பல உள்ளன. இதை கூட்டாக செய்தும் ஸ்டூ போன்றவற்றில் சேர்த்தும் உட்கொள்ளலாம்.

9. அமராந்த்: இலை மற்றும் விதைகளுடன் கூடிய பன் முகத்தன்மை கொண்ட கீரை இது. இதில் ப்ரோட்டீன் மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகம்.

10. சாயோட்டே: தமிழில் 'சவ் சவ்' என்று இதைக் கூறுவார்கள். பூசணிக்காய் மற்றும் ஸுச்சினி வகையைச் சேர்ந்த காய். இதிலும் பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com