மவுத் அல்சரை குணமாக்க 10 எளிய வீட்டு வைத்தியக் குறிப்புகள்!

Mouth Ulcer
மவுத் அல்சர்https://www.apexmedicalclinics.com
Published on

வுத் அல்சர் (Mouth Ulcer) எனப்படும் வாய் புண்ணானது பல காரணங்களால் வாயில் தோன்றும். சில நேரம் நம்மை அறியாமலேயே உதடு மற்றும்  உள்பக்கத்து கன்னத்து சதையை கடித்துவிடும்போது அல்லது பச்சைப் பூண்டை அடிக்கடி  கடித்து மெல்லும்போது அதன் காரமான சாறு பட்டு வாயில் புண் உண்டாகலாம். இவற்றை எளிதில் குணமாக்க எளிதான 10 வீட்டு வைத்தியக் குறிப்புகளை இப்பதிவில் பார்க்கலாம்.

1. தேன்: தேன் ஒரு அற்புதமான மருத்துவ குணங்கள் நிறைந்த உணவுப் பொருள். இதை மவுத் அல்சர் மீது சிறிது தடவி அப்படியே விட்டுவிட்டால் புண் குணமாகும்.

2. பேக்கிங் சோடா பேஸ்ட்: பேக்கிங் சோடா பவுடருடன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக்கி புண்கள் மீது தடவி காய விடவும். பிறகு வாயை கழுவி விட குணம் கிடைக்கும்.

3. தேங்காய் எண்ணெய்: சக்தி வாய்ந்த பல மருத்துவ குணங்கள் கொண்டது தேங்காய் எண்ணெய். இதை அப்படியே வாய்ப்புண் மீது தடவி வைக்க புண் விரைவில் ஆறிவிடும்.

4. உப்பு நீர் கரைசல்: ஒரு டேபிள் ஸ்பூன் உப்பை வெது வெதுப்பான நீரில் சேர்த்து கரைசல் ஆக்கி அதைக் கொண்டு வாய் கொப்பளிக்க வாய்ப்புண்கள் ஆறும்.

5. டூத் பேஸ்ட்: Q-tip உதவியால் பற்பசையை எடுத்து புண்ணின் மேல் முழுவதும் தடவி சில நிமிடங்கள் வைத்திருக்கவும். பிறகு தண்ணீரால் வாயை கழுவி விட வாய்ப்புண் ஆற ஆரம்பிக்கும்.

6. ஆரஞ்சு ஜூஸ்: வைட்டமின் C நிறைந்துள்ள ஆரஞ்சு சுளையை அதிலுள்ள ஜூஸ் புண்ணில் படும்படி சுவைத்து உண்பதாலும் புண் ஆறுவதற்கு வாய்ப்பு உண்டாகும்.

7. லவங்க எண்ணெய்: கரம் மசாலா பவுடர் தயாரிப்பில் உபயோகப்படுத்தப்படும் லவங்கம் என்ற பொருளிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் மவுத் அல்சர் உள்ளிட்ட பல கோளாறுகளை இயற்கை முறையில் தீர்க்க வல்லது.

இதையும் படியுங்கள்:
தற்காப்புக்கலை விளையாட்டாகிய சிலம்பாட்டமும் அவற்றின் பயன்களும்!
Mouth Ulcer

8. தேங்காய்ப் பால்: இது வலியை குறைக்கவும் அமைதிப்படுத்தவும் உதவும் குணம் கொண்டது. தேங்காய்ப் பாலில் வாய் கொப்பளித்து உமிழ்வதால் புண் விரைவில் குணமாகும் வாய்ப்பு உண்டாகும்.

9. மஞ்சள் தூள்: மஞ்சள் தூளில் தண்ணீர் சேர்த்து கெட்டியான பேஸ்ட் ஆக்கி வாய்ப்புண் மீது தடவி வைத்து சில நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இவ்வாறு தினமும் இரண்டு முறை செய்து வர புண் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

10. பூண்டு: ஃபிரஷ் பூண்டுப் பல்லை நசுக்கி அதன் சாற்றில் ஒரு துளியை புண் மீது தடவி விட்டு முப்பது வினாடிகளில் கழுவிவிடவும். இதேபோல் சில தினங்கள் செய்து வர புண் குணமடையும்.

மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி மவுத் அல்சரை மறையச் செய்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com