அம்மை நோயை குணமாக்கும் 10 எளிய மருத்துவக் குறிப்புகள்!

 Chickenpox
Chickenpox https://www.nhsinform.scot

கோடைக்காலம் வந்து விட்டால் வெப்பம் தாளாமல் அம்மை நோயும் வர ஆரம்பித்துவிடும். அதற்கு சில மருந்து வகைகளை தெரிந்து வைத்துக்கொண்டால் அதிலிருந்து நிவாரணம் பெற உதவியாக இருக்கும். அதனைப் பற்றி இனி காணலாம்.

* ஓரிரு தாழம்பூவை பொடியாக நறுக்கி ஒரு லிட்டர் நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பிறகு அதைக் கொதிக்க வைத்து வடிகட்டி தேவையான அளவு கற்கண்டு கலந்து தேன் பதமாய் (தாழை மணப்பாகு) காய்ச்சி வைத்துக் கொண்டு 30 மில்லியில் சிறிது நீர் கலந்து பருகி வர, உடல் வெப்பம் தணியும். அம்மை நோய் தடுப்பு மருந்தாக இது பயன்படும்.

* வேப்பங்கொழுந்துடன் குன்றி வேர்ப் பொடியயை சம அளவு எடுத்து நீர் விட்டு அரைத்து பட்டாணி அளவு மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றை காலை ,மதியம், மாலை என்று ஓரிரு மாத்திரைகளாக கொடுத்து வர பெரியம்மை நோய் குணமாகும்.

* வேப்ப இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து தடவி வர அம்மை கொப்பளங்கள், புட்டாலம்மை என்று சொல்லப்படும் பொண்ணுக்கு வீங்கி ஆகியவை குணமாகும்.

* குங்குமப்பூவை குன்றிமணி அளவில் எடுத்து அதனுடன் இருபது துளசி இலை சேர்த்து அரைத்து கோலி அளவு சாந்தை காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட அம்மை காய்ச்சல் குணமாகும்.

* அம்மை நோய்க் கண்டுள்ள காலங்களில் கண்களுக்கு அம்மையால் தீங்கு வராமல் இருக்க, மருதோன்றி இலையை அரைத்து கால்களின் இரண்டு பாதங்களிலும் கட்டலாம். இதனால் அம்மை நோய் தணியும். கண்களுக்கு வெப்பம் ஏறாமல் இருக்கும்.

* அம்மையால் ஏற்பட்ட காய்ச்சல் குணமாக அரை ஸ்பூன் வெந்தயம், ஐந்து மிளகு இரண்டையும் தூளாக்கி ஒரு டம்ளர் நீரில் கலக்கி காய்ச்சி காலை, மாலை அரை டம்ளர் கஷாயத்தை இரண்டு நாள் பருக வேண்டும்.

* அத்தி மரப்பட்டையை இடித்து ஒரு டம்ளர் நீரில் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை அரை டம்ளர் கஷாயம் இரண்டு நாட்கள் பருக வேண்டும்.

இதையும் படியுங்கள்:
சிக்மா வகைப் பெண்களின் சிறப்பியல்புகள் தெரியுமா?
 Chickenpox

* அம்மைத் தழும்புகளின் மீது இளநுங்கை அரைத்துப் பூசி வர தழும்புகள் மறையும்.

* அம்மை கண்டிருக்கும் வீட்டில் வறுப்பது, பொரிப்பது போன்ற புகை ஏற்படும் செயல்களை செய்யாமல் இருந்தால் உஷ்ணம் நீங்கி, அம்மை நோய் தணிய ஏதுவாக இருக்கும்.

* அம்மை கண்டிருப்பவர்கள் வீட்டில் சின்ன வெங்காயம், வேப்பிலை போன்றவற்றை  படுக்கை அறையின் ஒரு மூலையில் பரத்தி வைத்திருப்பார்கள். இதனால் நல்ல குளிர்ச்சி கிட்டும். தொற்றும் பரவாது.

அம்மை நோய் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள இதுபோன்ற குறிப்புகளை தெரிந்து வைத்து இருப்பது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com