கர்ப்பிணிகள் அவசியம் தெரிந்துகொள்ள 10 ஆலோசனைகள்!

10 tips for pregnant women to know
10 tips for pregnant women to know

கோடை வெயில் கொளுத்தி வாட்டுகிறது. சாதாரணமான நமக்கே தாள முடியவில்லை. வயிற்றில் சிசுவைத் தாங்கும் கர்ப்பிணிகள் என்ன செய்வார்கள்? பொதுவாக, ஆடி மாதம் கருத்தரிக்கும் பெண்களுக்கு கோடைக்கால சித்திரையில் பிரசவம் நிகழும் என்பதால் பெரியவர்கள் அதை தவிர்க்கச் சொல்வார்கள். அது வசதிகளற்ற அந்தக் காலம். இருப்பினும் தற்போதும் கர்ப்பிணிகள் கவனமாகவே இருக்க வேண்டும். உறக்கம் என்பது கர்ப்பிணிகளுக்கு அவசியமாகும். அதைக் குறித்த சில ஆலோசனைகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. கர்ப்பிணிகள் உறங்கும்போது சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அது தாய்க்கும், சேய்க்கும் பாதுகாப்பானது. கர்ப்ப காலத்தில் பெண்கள் குறைந்தபட்சம் 8 மணி நேரம் உறங்குவது கருவின் வளர்ச்சிக்கு அவசியமானது.

2. புரண்டு படுத்தால் குழந்தை கொடி சுற்றிப் பிறக்கும் எனக் கூறப்படுவது உண்மையல்ல. இருப்பினும், எழுந்து உட்கார்ந்து பிறகு மெதுவாக படுக்க வேண்டும். ஒருக்களித்துப் படுப்பதே நல்ல படுக்கை முறை. மல்லாந்து படுக்கும்போது கருப்பை இரத்தக் குழாய்களை அழுத்துவதால் மூச்சுத்திணறல், இரத்த ஓட்டக்குறைவு போன்றவை உண்டாகலாம்.

3. இரவு நேரத்தில் எளிதில் உறக்கம் வராது. எனவே, சிறிது தூரம் மெதுவாக நடந்துவிட்டு வந்து உறங்கலாம். அசதியில் உறக்கம் வரும். இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பாக வெது வெதுப்பான நீரில் குளித்து விட்டு உறங்கச் செல்வது நன்மை தரும். எந்தக் காரணம் கொண்டும் குப்புறப் படுத்து உறங்கக் கூடாது. ஏனெனில், அது கருப்பையை அழுத்துவதோடு குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

4. உறங்கும் முன் தலைக்கு அருகில் செல்போன் வைத்துக்கொண்டு உறங்குவதை தவிர்க்க வேண்டும். அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

5. தலையணையை வசதியான வகையில் வைத்து உறங்குவது நல்லது. கால்களுக்கு வைத்து உறங்குவதால் கால் வீக்கம் வலி ஏற்படுவதை தவிர்க்கலாம். கடைகளில் கிடைக்கும் சிறிய அளவிலான கர்ப்பகால தலையணைகளை வாங்கி உபயோகிக்கலாம்.

6. இரவு நேரங்களில் அதிக இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், மார்பக வளர்ச்சி, இடுப்பு பகுதிகள் விரிவடையும். அப்பொழுது ஏற்படும் சிரமத்தை தவிர்க்கவே இறுக்கமான ஆடைகளைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
நீரிழிவைத் தடுக்கும் கொள்ளு!
10 tips for pregnant women to know

7. பெரும்பாலான கர்ப்பிணிகள் நெஞ்செரிச்சல், அஜீரணக் கோளாறுகளினால் சிரமப்படுவார்கள். இவர்கள் உண்ட உடன் உறங்கச் செல்லக்கூடாது. எளிதில் ஜீரணமாகும் உணவுகளை மட்டுமே உண்ணவேண்டும். படுக்கப் போகும் முன்பு வெது வெதுப்பாக பால் குடித்தால் நன்கு உறக்கம் வரும்.

8. தற்போது வெயில் காலம் என்பதால் வயிறு மற்றும் உடல் பகுதிகளுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தாத தேங்காய் எண்ணெய் அல்லது தரமான ஆலோவேரா தயாரிப்புகளை பயன்படுத்தி உடலின் நீர்த்தன்மை பெறலாம். இதனால் அரிப்பு வராமல் தடுக்கலாம்.

9. சிலருக்கு கால்கள் சுரந்து வீங்கும் நிலை இருக்கும். அவர்கள் இரவில் வெதுவெதுப்பான நீரில் கால்களை மட்டும் வைத்து பத்து நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து பிறகு படுக்கைக்கு செல்லலாம்.

10. தூங்கும் முன்பு மனதிற்கு பிடித்த புத்தகங்களை வாசிப்பதும் பாடல்களை கேட்பதும் கதைகளை ஆடியோவாக கேட்டு ரசிப்பதும் கருவில் உள்ள குழந்தைக்கும் அறிவு வளர்ச்சியைத் தூண்டும் என்பதுடன் நிம்மதியான ஆழந்த உறக்கமும் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com