கொசுக்களின் மூலம் பரவும் நோய்கள்... கட்டுப்படுத்த 10 ஆலோசனைகள்!

Mosquito
Mosquito
Published on

கொசுக்கள் மனிதர்களை கடிப்பதால், மலேரியா, சிக்கன் குனியா, டெங்கு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும், தோராயமாக 30 கோடி மக்கள் மலேரியா நோயினால் பாதிக்கப்படுகின்றனர். மலேரியாவானது அனோபிலெஸ் என்ற பெண் கொசுவால் கடத்தப்படுகிறது. அதேபோல் சிக்கன் குனியா, டெங்கு காய்ச்சலானது ஏடிஸ் எய்ஜிப்டி என்ற கொசுவால் கடத்தப்படுகிறது. இது போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வாமை, நடுக்கம், தீவிரக் காய்ச்சல், தலைவலி மூட்டு வலி என்று பல உடல்நிலைக் கோளாறுகள் ஏற்படுகின்றன.

கொசுக்கள் உற்பத்தியினைத் தடுக்கும் வழிமுறைகள்:

1. எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். நீர் தேங்கியிருக்கும் பொருட்களாகிய, பானைகள், பூத்தொட்டிகள், கொட்டாங்குச்சிகள், பயனில்லாமல் இருக்கும் டயர், சாப்பிட்ட பின் எறியப்படும் நெகிழிப் பாத்திர வகைகள் ஆகிவற்றில் நீர் தேங்கி இருப்பதை அகற்ற வேண்டும்.

2. நீர்த் தொட்டிகளை முறையாக மூடி வைக்க வேண்டும். அதோடு முறையாக பராமரிக்கவும் வேண்டும்.

3. தேங்கி நிற்கின்ற நீர்நிலைகளின் மீது காணப்படும் கொசுக்களின் லார்வாவின் மீது வேப்ப எண்ணெயைத் தெளிக்க வேண்டும்.

4. முதிர்ச்சியடைந்த கொசுக்களை (கொசு மருந்து) பூச்சிக்கொல்லிகளை தெளிப்பதன் மூலம் அழிக்கலாம்.

5. கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு தோதான இடங்களில் உள்ள நீரினை அகற்ற வேண்டும்.

6. நீர்நிலை தொட்டிகளில் கொசுக்களின் லார்வாக்களை சாப்பிடும் கம்பூசியா போன்ற மீன்களை வளர்க்கலாம்.

7. வீட்டின் அருகே சாக்கடைகள் (சமையலறை கழிவு நீர், குளியலறை கழிவு நீர்) தேங்காமல் இருப்பதை பார்த்துக் கொள்ள வேண்டும்.

8. வீட்டைச் சுற்றி புதர்ச் செடிகள் அடர்ந்து இருக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

9. வீட்டிற்கு அருகிலேயே நெகிழி குப்பைகளை கொட்ட வேண்டாம்.

10. பழைய பெயிண்ட் வாளிகள் மற்றும் டப்பாக்களை ஆங்காங்கே போட்டு வைக்க வேண்டாம். அதனை மீண்டும் தண்ணீர் பயன்பாட்டிற்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதேபோல், மேலே கூறிய ஆலோசனைகளை நாம் முறையாக கடைப்பிடித்தோமானால் கொசுக்களின் மூலம் பரவும் நோய்களை நாமே தடுக்க முடியும்.

கொசுக்களால் பரவும் நோய்கள் மனிதனுக்கு பல்வேறு உடல் நிலைக் கோளாறு அபாயங்களை ஏற்படுத்துகின்றன. கொசுக்கள் கடிக்காமல் இருப்பதற்கு உடம்பில் தேங்காய் எண்ணெயை தேய்க்க வேண்டும்.

கொசுக்களின் தொல்லைகளை குறைக்க கொசு விரட்டி, மருந்துகள், கொசு பேட் போன்றவைகளை பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
போதை மருந்து (Drug) உபயோகத்தை கண்டுபிடிக்க உதவும் தலைமுடி..!
Mosquito

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com